Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
பள்ளிக்கல்வித்துறையில் அனைவரும் தமிழில் கையொப்பமிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் 2021ம் ஆண்டு வெளியிட்ட அரசாணையைக் குறிப்பிட்டு, பள்ளிக்கல்வி இயக்குநர், அறிக்கை வெளியிட்டுள்ளார், தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் சார்பில், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் பணியாற்றி வரும் அனைத்து இயக்குநர்கள், சென்னை பள்ளிக் கல்வி இயக்கக இணை இயக்குநர்கள், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குச் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில், “பள்ளிக் கல்வித்துறையின் கீழ் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் அரசு ஆணைகளில் கூறப்பட்ட விதிமுறைகளின்படி அனைத்து இடங்களிலும் தங்களின் பெயர்களை எழுதும் போதும், கையெழுத்திடும் போதும் கண்டிப்பாகத் தமிழிலேயே கையெழுத்திட வேண்டும் என்று மீண்டும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனக் கடந்த 2021 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையைக் குறிப்பிட்டுப் பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி வருகைப்பதிவு, ஆவணங்களிலும் தமிழில் கையொப்பமிடவும், மற்றும் மாணவர்களையும் தமிழில் கையொப்பமிட அறிவுறுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
IMPORTANT LINKS
Thursday, July 27, 2023
Home
கல்விச்செய்திகள்
பள்ளிக்கல்வித்துறையில் அனைவரும் தமிழில் கையெழுத்திட அதிரடி உத்தரவு.. மாணவர்களையும் தமிழில் கையொப்பமிட அறிவுறுத்தல்!!
பள்ளிக்கல்வித்துறையில் அனைவரும் தமிழில் கையெழுத்திட அதிரடி உத்தரவு.. மாணவர்களையும் தமிழில் கையொப்பமிட அறிவுறுத்தல்!!
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment