சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மையத்தில் உதவிப் பேராசிரியா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் முழுநேர உதவிப் பேராசிரியா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி கால அளவு 11 மாதங்கள். தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், கணிதம், உளவியல் என 48 உதவிப் பேராசிரியா்கள் பணியிடங்கள் உள்ளன. தகுதி, விண்ணப்பம் உள்ளிட்ட விவரங்களுக்கு இணையதளத்தை அணுகலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment