Join THAMIZHKADAL WhatsApp Groups
வெங்காயதை பச்சையாக சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும்.
வெங்காயத்தில் வைட்டமின் சி சத்து மிகவும் அதிகமாக உண்டு. பச்சை வெங்காயத்திலுள்ள கந்தக சத்து சிலருக்கு பிடிக்காது. அப்படிப்பட்டவர்கள் பிஞ்சு வெங்காயமாகப் பார்த்துச் சாப்பிடலாம். முற்றிய வெங்காயமாக இருந்தால் வேக வைத்துச் சாப்பிடலாம்.
பூச்சி கடிக்கு:
சிலருக்கு பூச்சிகள் கடித்தால் என்ன மருந்து வைப்பது என்று பதட்டத்துடன் காணப்படுவர். வெங்காயத்தைப் அரைத்து நச்சு உயிரினங்கள் கடித்த இடத்தில் தேய்த்தால் வலி குறையும். உதாரணமாக தேள், குளவி.
உடல் வெப்பம்:
உடல் அதிக சூடு உடையவர்கள் வெங்காயத்தை அதிகம் சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் இது உடல் வெப்பம் அதிகரிக்கும்போது உடல் வெப்பத்தைச் சமனப்படுத்துகிறது. நாடித் துடிப்பைச் சீராக்கும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு.
மூளை:
தினமும் வெங்காயத்தை சூப்பாகச் செய்து சாப்பிடலாம். இப்படி செய்யும் போது மூளையின் ஆற்றலை வலுப்படுத்தி சக்தியை அதிகரிக்கிறது. இது உடலை ஆரோக்கியப்படுத்தும் டானிக்காகவும் திகழ்கிறது.
ஆகவே, இரவு தூங்கப் போவதற்கு முன்பு ஒரு கப் வெங்காய சூப் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் வெங்காயத்தை வேக வைத்து தேன், கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.
இருமல் குணமாக :
முதுமைப் பருவத்தில் தோன்றுகிற கடுமையான இருமலுக்கு வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட குணம் தெரியும். சாதாரண இருமலுக்கு வெங்காயச் சாற்றை மோருடன் கலந்து குடிக்க குணமாகும்.
ஈறு வலி:
சிலருக்கு பற்களில் ஈறு பகுதிகளில் வீக்கம் கண்டு சீழ் வடிவதுண்டு. அப்போது வலியும், எரிச்சலும் கடுமையாக இருக்கும். அந்தக் குறைபாட்டை போக்க பதமான சுடுநீரில் தாராளமாக வெங்காயச் சாற்றைக் கலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும்.பிறகு வெங்காயச் சாற்றை கொஞ்சம் பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட பற்களில் நன்றாகத் தடவி விட வேண்டும்.
உடல் பருமன்:
வெங்காயத்தில் கொழுப்புச் சத்து மிகமிகக் குறைவு. கலோரிகள் அதிகமாக உள்ளது. அதனால் உடல் பருமனைக் குறைத்துக்கொள்ள விரும்புவோர் உணவில் வெங்காயத்தைத் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.
செரிமானம்:
ரத்த விருத்திக்கும், இரத்த சுத்தத்திற்கும் வெங்காயம் மிகவும் நல்லது. இது உடலுக்கு அழகை கொடுக்கிறது. உணவோடு வெங்காயத்தைச் சேர்த்துக் சாப்பிடும் போது சாப்பிடும் உணவு வெகு எளிதில் செரிமானமாக வெங்காயம் பெரிதும் உதவுகிறது.
தலைவலிக்கு:
சிலருக்கு அடிக்கடி தலைவலி ஏற்படும். அதற்கு நீங்கள் பல மருந்துகளை எடுத்தும் குணம் ஆகாமல் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் வெங்காயத்தை நசுக்கி அதை முகர்ந்தால் உடனே உங்களுக்கு வித்தியாசம் தெரியும்.
No comments:
Post a Comment