Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 31, 2023

திராட்சை தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?


பொதுவாக திராட்சை இலைகள், விதைகள், பழங்கள் ஆகியவற்றில் ஆரோக்கிய பண்புகள் அதிகம் உள்ளன. மேலும், திராட்சையில் கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

இவை உடலில் உள்ள வாத மற்றும் பித்த தோஷங்களை அகற்றி சமநிலைப்படுத்துவதற்கு உதவுகின்றன.

திராட்சை தண்ணீர் குடித்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி உணவியல் நிபுணர் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்துள்ளார்.

திராட்சை தண்ணீர் செய்யும் முறை

தினமும் இரவில் 4 முதல் 5 உலர்திராட்சைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிக்க வேண்டும்.

அதில் உள்ள உலர்திராட்சைகளையும் சாப்பிடலாம். ஒரு நாளுக்கு 5 திராட்சைக்கு மேல் சாப்பிட வேண்டாம்.

இதை கர்ப்பிணி பெண்கள் மருத்துவ ஆலோசனைப்படி மட்டுமே சாப்பிட வேண்டும்.

திராட்சை தண்ணீரில் இருக்கும் பண்புகள்ஆக்சிஜனேற்ற பண்புகள்

பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள்

பசியைக் கட்டுப்படுத்தும் பண்புகள்

அழற்சி எதிர்ப்பு பண்புகள்

திராட்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

திராட்சையில் வைட்டமின்-சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் நம்முடைய சருமத்தை பளபளப்பாக்கவும், முகப்பரு வராமல் தடுக்க உதவும், இதனால், நம்முடைய முடியை பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் வைக்க உதவும்.

ஆக்சிஜனேற்ற பண்பு இருப்பதால் பாக்டீரியா தொற்றுக்களை எதிர்த்து போராட உதவும்.

மலச்சிக்கல் மற்றும் மலத்தை தளர்த்தி இயக்க உதவும், செரிமானம் மற்றும் இரத்த சோகையை சரிசெய்யும்.

திராட்சை தண்ணீரை குடிப்பதால் அதில் உள்ள கால்சியம் பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக வைக்க உதவும்.

திராட்சை தண்ணீரில் உள்ள பொட்டாசியம், போரான் மற்றும் கால்சியம் ஆகியவை பெண்களின் ஆஸ்டியோபோரோசிஸில் உதவியாக இருக்கும்.

உலர் திராட்சையை பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரிப்பது மட்டுமல்லாமல் உடல் எடையும் அதிகரிக்கும்.

No comments:

Post a Comment