Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, July 8, 2023

ஆபூர்வ குணம் கொண்ட பிரம்ம கமலம் பூ..! பூஜை செய்து வழிபட்ட குடும்பதினர்..!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
அகரம் அருகே ஆபூர்வ குணம் கொண்ட பிரம்ம கமலம் பூ பூத்தது. பூஜை செய்து வழிபட்ட குடும்பத்தினர்.

இமயமலைப் பகுதிகளில் வளரக்கூடிய பிரம்ம கமலம் பூ வருடத்திற்குஒரு முறை மட்டுமே நள்ளிரவில் மலரக் கூடிய அறியவகையான பூ,வெண்ணீறம் கொண்ட மலர் இது கள்ளி இனத்தை சேர்ந்த செடியாகும்.

இலையின் பக்கவாட்டில் சிறுசிறு கணுக்கள் தோன்றி, அவற்றிலிருந்து புதுஇலைகள் உருவாகும். அதன் கணுக்களில் புதிய மொட்டுகள் உருவாகிமலர்களாய் மலரும். இந்த மலர்கள் ஆண்டுக்கு ஒரு முறைதான் பூக்கும்.இரவு 10 மணிக்கு பூத்து அதிகாலை உதிர்ந்து போகும் தன்மைகொண்டவையாகும்..இந்த வித்தியாசமான மலர் இமயமலையில் காணக்கூடியது.

இலையிலிருந்து பூக்கும் இந்த மலர், பிரம்மனின் நாபிக் கமலத்திலிருந்துதோன்றுவதுபோல அமைந்திருப்பதால், இதைப் பிரம்ம கமலம் என்றுஅழைக்கின்றனர். மருத்துவ குணமும் தெய்வீகத் தன்மையும் வாய்ந்த இந்தஅதிசய மலரை, அது மலரும் நேரத்தில் கண்டு தரிசித்தால் நல்ல பலன்கள்கிடைக்கும் என நம்பப்படுகிறது. இந்தமலரின் இலையை மற்றும் தண்டு பகுதியை வேட்டி வைத்தாலே வளரும்வித்தியசமான தண்மை கொண்டது. பூ பூக்கும் நேரத்தில் இலை விளிம்பில் நறுமணம் பரவி ஆளையே செக்க வைக்கும் தற்போதுதமிழகத்திலும் பரவலாக மக்கள் வீடுகளில் வளர்த்து வருகின்றனர்.

அதே போல் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் அருகேயுள்ள குடிமேனஹள்ளி கிராமத்தில் உள்ள தருமன் என்பவரது வீட்டில் இந்த அபூர்வமான பிரம்ம கமலம் பூவின் செடி வளர்த்து வருகிறார். இந்நிலையில் அந்த பிர்ம கமலம் பூ நேற்று வெள்ளிகிழமை இரவு 9 மணியளவில் 8 பூக்கள் பூக்கத் தொடங்கின. அப்போது பூவிற்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். காலையில் பார்த்தபோது அந்த மலர் வாடிவிட்டது.


இதுகுறித்து தருமன் குடும்பத்தினர் கூறும்போது : எங்கள் வீட்டில் பூத்த பூவிற்கு பூஜைகள் செய்யும்போது பிரம்மாவிற்கு பூஜைகள் செய்வதாகவே கருதி இம் மலருக்கும் பூஜை செய்து வழிப்பட்டோம். பூஜை செய்து வழிபட்டால் வழிபடுபவர்கள் விருப்பங்கள் உடனே நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது எனவே இந்த மலரை நாங்கள் வழிபட்டு வருகிறோம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News