Join THAMIZHKADAL WhatsApp Groups
பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் உட்பொருள், இரத்தம் உறைவதைத் தடுக்கும் சக்தி கொண்டது. கொலஸ்ட்ராலைக் குறைத்து ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
இதில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகளும் உள்ளது. முக்கியமாக பூண்டு உடலைத் தாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும்.
பண்டைய கால எகிப்தியர்கள்,
கிரேக்கர்கள், ரோமானியர்கள், சீனர்கள், ஜப்பானியர்கள் மற்றும் பூர்வீக
அமெரிக்கர்கள் பூண்டை உணவாகவும் முக்கியமாக மருந்தாகவும் பயன்படுத்தினர்
என்று வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள். அப்படி காலம் காலமாக பூண்டு
மனிதர்களின் நோய் நீக்கியாக செயல்பட்டு வந்துள்ளது.
பூண்டு அன்றைய
காலங்களில் தெய்வங்களின் தேன், ஏழை மனிதனின் பொக்கிஷம் அல்லது துர்நாற்றம்
வீசும் ரோஜா என்றும் அழைக்கப்பட்டுள்ளது. அதற்கு பூண்டு பற்களை கொண்டு டீ
தயாரித்து குடிக்கலாம் அல்லது பச்சையாக சாப்பிடலாம். குறிப்பாக தினமும் ஒரு
டம்ளர் பூண்டு டீயை காலையில் குடித்து வந்தால், உடலினுள் பல மாற்றங்கள்
தோன்றும்.
ஏனென்றால் பூண்டு தேநீர் பலவிதமான பொருட்களுடன் தயாரிக்கப்படுகிறது. இருப்பினும் பூண்டு, எலுமிச்சை மற்றும் தேன் சேர்ந்த கலவை மிகவும் சக்தி வாய்ந்தது. அப்படி பூண்டு தேநீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
இதய ஆரோக்கியம்
ஒருவருக்கு இதய ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது. ஒருவருக்கு உடலில்
கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அது இதய தமனிகளின் சுவர்களின்
படிந்து, பெருந்தமனி தடிப்பை உண்டாக்கும். ஆகவே கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு
குறைந்து, இதய ஆரோக்கியம் பெற வேண்டுமானால் தினமும் பூண்டு டீ குடிக்க
வேண்டும்.
அப்படி நாம் செய்து வரும் போது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து, இதய ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி வலுபெறும். இதில் காணப்படும் அல்லிசினுடன், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகளும் உள்ளதால், இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும்.
எடை குறைவு
யாருமே
குண்டாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. நீங்கள் உடல் எடை குறைக்க
வேண்டும் என்று நினைப்பவராக இருந்தால் பூண்டு டீ குடித்தால் போதும். இது
உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புக்களைக் கரைக்கும் செயல்பாடுகளை
அதிகரித்து எடையை குறைக்க உதவும்.
சுவாச மண்டலம் மேம்படும்
குளிர் காலங்களிலும் மழை காலங்களிலும் அதிகமாக சளி, இருமல், நெஞ்சு சளி
மற்றும் இரவு நேரத்தில் தூங்க முடியாதவாறு சுவாசிப்பதில் பிரச்சனையை
சந்திப்போம். இந்த நேரத்தில் பூண்டு டீயை ஒரு கப் குடித்தால் இது அனைத்து
வகையான சுவாச பிரச்சனைகளையும் நம்மை தொட விடாமல் அகற்றும்.
முதுமையை தாமதப்படுத்தும்
உங்கள் சருமம் சுருக்கம் ஏற்படாமல் பள பளப்புடன் இருக்க வேண்டும் என்றால்
அடிக்கடி பூண்டு டீயை குடிக்க வேண்டும். ஏனென்றால் அதில் உள்ள
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் ஏ, சி, பி1 மற்றும் பி2 போன்றவை
ப்ரீ-ராடிக்கல்களால் சருமம் பாதிப்படைவதைத் தடுத்து பாதுகாப்பளிக்கும்.
இதன் விளைவாக விரைவில் சரும சுருக்கம் ஏற்படுவதும் தடுக்கப்படும்.
புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்
புற்று நோயால் பாதிக்கபட்டவர்கள் பூண்டு டீயை தினமும் காலையில் வெறும்
வயிற்றில் குடித்து வந்தால்,பூண்டில் காணப்படும் ஆன்டி-கார்சினோஜெனிக்
பண்புகள் இந்த நோய் வராமல் தடுகலாம். என்னெனில் ஆய்வுகளில் பூண்டில்
ஆன்டி-கார்சினோஜெனிக் பண்புகள் இருப்பதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
கல்லீரல் ஆரோக்கியம்
பூண்டில் உள்ள அல்லிசின் மற்றும் செலினிகயம், கல்லீரல் ஆரோக்கியத்தை
மேம்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆகவே பூண்டு டீயை தினமும்
குடித்து வந்தால், கல்லீரல் நீண்ட நாட்கள் சிறப்பாகவும், ஆரோக்கியமாகவும்
செயல்படும்.
இரத்த அழுத்தம் சீராகும்
உயர் இரத்த அழுத்தம் காரணமாக இதயம் வழக்கத்தைவிட கடினமாக வேலை செய்ய
வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சனையால் நெருங்க படுபவர்கள் பூண்டு
டீயை தினமும் குடித்தால், உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விரைவில்
விடுபடலாம்.
பூண்டு டீ தயாரிக்கும் முறை
நான்கு பூண்டு பற்களை பொடியாக நறுக்கி மூன்று கப் தண்ணீர் கலந்து நன்கு
கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும். பின் ஓரளவு சூடு குறைந்ததும்,
அதில் 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் அரை கப் எலுமிச்சை சாறு சேர்த்து
கலந்து கொள்ள வேண்டும். சுவையான பூண்டு டீ ரெடி.
பொதுவாக எல்லா
பொருட்களில் இருப்பது போல பூண்டிலும் சில பக்க விளைவுகள் உள்ளது. பூண்டு
உட்கொள்வதன் பொதுவான பக்க விளைவுகளில் ஒன்று மூச்சு காற்றில் கெட்ட வாடை
மற்றும் உடல் நாற்றம், சில நேரங்களில் நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்று வலி
வருதல்.
பூண்டு சில நேரங்களில் ஒவ்வாமை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. பூண்டு ஒவ்வாமை உள்ளவர்கள் கவனமாக பயன்படுத்த வேண்டும்.
நீங்கள் ஏதேனும் மருந்து மாத்திரைகளை அன்றாடம் எடுப்பவராயின், பூண்டு டீயைக் குடிக்கும் முன், அந்த டீயைக் குடிக்கலாமா என உங்கள் மருத்துவரிடம் கேட்டு, அவரது அனுமதி பெற்ற பின் உட்கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment