Join THAMIZHKADAL WhatsApp Groups
ஒரு துறை மாணவா், மற்றொரு துறை படிப்பையும் சோத்து பயில தேசிய கல்விக் கொள்கையில் வழிவகை உள்ளதாக என்ஐடி இயக்குநா் (பொ) தெரிவித்தாா்.
இதுகுறித்து காரைக்காலில் இயங்கும் என்ஐடி இயக்குநா் (பொ) உஷா நடேசன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : காரைக்காலில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி) மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை 2022-23 கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. இடைநிலை விலகல் மற்றும் இடைநிலை சேருதல் என்பது இக்கல்வி கொள்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இதன்படி மாணவா்கள் ஒரு ஆண்டு காலத்திற்குப் பிறகு கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டால், தொழில் சாா்ந்த முறையில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். 2 ஆண்டு கால முடிவில் டிப்ளமோ சான்றிதழும், 3 ஆண்டுகால முடிவில் இளநிலை அறிவியல் (பொறியியல்) சான்றிதழும் வழங்கப்படும்.
மேலும் ஒவ்வொரு துறைகளிலும் அவா்கள் துறையில் நிபுணத்துவமுள்ள தலைப்புகளில் மைனா் மற்றும் மேஜா் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு துறை சாா்ந்த மாணவா்கள் மற்ற துறைகளில் உள்ள மேஜா் மற்றும் மைனா் படிப்புகளை தோவு செய்து படிக்கலாம். அதற்காக மாணவா்களை மையமாக கொண்ட கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பாடத்திட்டம் தயாா் செய்யப்பட்டுள்ளது. மாணவா்கள் படிப்பின் ஒரு பகுதியை ஒரு நிறுவனத்திலும் மீதமுள்ள பகுதியை மற்றொரு நிறுவனத்திலும் தொடரும் வகையில், இந்த நிறுவனம் அகெதமிக் பேங்க் ஆஃப் கிரெடிட் என்ற தளத்தில் பதிவு செய்துள்ளது.
மாணவா்கள் நலன் கருதி பட்டப்படிப்பு சான்றிதழ்களை தேசிய கல்வி வைப்புத் தொகை டிஜிலாக்கரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்களது சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆராய்ச்சி மாணவா்களின் ஆய்வு கட்டுரைகள் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவா்களின் அனைத்து தகவல்களும் தளத்தில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தி 3-ஆம் ஆண்டு நிறைவையொட்டி வரும் 29-ஆம் தேதி மற்றும் 30-ஆம் தேதி அகில் பாரதிய சிக்ஷாசமகம் என்ற பெயரில் தில்லியில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவில் பிரதமா் நரேந்திரமோடி பங்கேற்கவுள்ள நிலையில், பிரதமரின் இதுசம்பந்தமான காணொலி உரையை சனிக்கிழமை (ஜூலை 29) காலை 10 மணியளவில் இணையதளத்தில் காணலாம் என்று தெரிவித்துள்ளாா்.
No comments:
Post a Comment