Join THAMIZHKADAL WhatsApp Groups
பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி இடுப்பின் பகுதியில் வலி இருக்கும்.
இடுப்பின் பகுதிகளில் வலி இருந்தால் அதை சரி செய்வதற்கு இரண்டு விதமான மூலிகைகள் உள்ளது. இந்த இரண்டு மூலிகைகளிலும் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் உள்ளது.
பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் இடுப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இந்த மூலிகைகளை வைத்து தயாரிக்க கூடிய மருந்து நல்ல ஒரு பலனை தருகிறது. அந்த இரண்டு மூலிகைகள் என்ன என்பதை இங்கு காண்போம்.
1. குறுந்தொட்டி மூலிகை
இதை ஒரு சிறந்த காயகற்பம் என்று கூறலாம். பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே இந்த மூலிகை மிகவும் பயன்படுகிறது. அதாவது ஆண்களுக்கு புராஜெஸ்டிரான் கிளேனில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் இந்த குறுந்தொட்டி சூரணம் நமக்கு மிகவும் பயன்படுகிறது. அதேபோல் பெண்களுக்கு கர்ப்பப்பையில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் இந்த குறுந்தொட்டி சூரணம் நமக்கு பலனை அளிக்கும்.
இந்த குறுந்தொட்டி சூரணத்தை 2 கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிடுவதற்கு முன்பாக இரண்டு வேலை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த குறுந்தொட்டி சூரணம் சாப்பிடுவதால் புளி மற்றும் சிக்கன் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.
2. மரமஞ்சள் மூலிகை
மஞ்சள் என்றாலே அதில் ஆன்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகள் அதிகமாக இருக்கும். மேலும் நுண்ணுயிரிகளை கொள்ளும் சக்தி இதில் நிறைந்து காணப்படும். இதன் முக்கியமான பண்பு என்னவென்றால் உடலில் எங்கெல்லாம் கிருமிகள் இருக்கிறதோ அதை குணமாக்கி விடும்.
மஞ்சளில் இருக்கக்கூடிய பண்புகளைப் போலவே இந்த மரம் மஞ்சளிலும் அனைத்து பண்புகளும் இருக்கிறது. உடலில் உள்ள கிருமிகளை அழிப்பது உடம்பில் எங்கேனும் காயம் ஏற்பட்டால் அந்த காயத்தின் வழியாக கிருமிகள் உடலின் உள்ளே நுழையாமல் பாதுகாப்பது என அனைத்து பண்புகளும் இதில் இருக்கிறது.பெண்களுக்கு இருக்கக்கூடிய கர்ப்பப்பை பிரச்சனையை தீர்க்கவும் இந்த மரமஞ்சளை தாராளமாக பயன்படுத்தி வரலாம்.
எனவே இடுப்பு பகுதியில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான வலிகளுக்கும் இந்த இரண்டு மூலிகைகளும் ஒரு நல்ல தீர்வாக அமையும். இந்த இரண்டு மூலிகைகளையும் தனித்தனியாகவும் கஷாயமாகவோ அல்லது டீயாகவோ வைத்து குடித்து வர இடுப்பு பகுதியில் இருக்கின்ற அனைத்து விதமான தீராத வலிகளும் நொடியில் குணமாகும்.
No comments:
Post a Comment