Join THAMIZHKADAL WhatsApp Groups
வயதான பிறகு, பணக்காரர்களுக்கு மட்டுமே வரும் என்று நினைத்திருந்த எண்ணத்தை தவிடு பொடியாக்கி மக்களை தலைதெறிக்க ஓட வைத்திருக்கிறது சர்க்கரை நோய்
என்ன செய்தால் சரியாகும் என்று நினைக்கும் மக்கள் என்னவெல்லாம் செய்தால் வராமல் இருக்கும் என்பதை மட்டும் கவனிக்க மறந்துவிடுகிறார்கள். வருவதற்கு முன் யோசிப்பதை விட வந்த பிறகு ஆரோக்கியம் தேடுவது இந்த நோயில் தவிர்க்கமுடியாததாகிவிட்டது.
சர்க்கரை குணப்படுத்தகூடிய நோய் அல்ல. அதே நேரம் அதை கட்டுக்குள் வைக்காவிட்டால் உடலில் இருக்கும் அத்தனை உறுப்புகளும் டேமேஜ் ஆகிவிடும். அதுவும் எந்தவிதமான அறிகுறீ இல்லாமலேயே, இந்த விஷயம் தான் மக்களை பயமுறுத்தி வைத்திருக்கிறது. அதனால் தான் எதை சாப்பிட்டால் சர்க்கரை குறையும், சர்க்கரையை கட்டுக்குள் வைக்க என்ன செய்யலாம் என்று தவிக்கிறார்கள். ஒரு புறம் மருத்துவர்கள் சொல்வதையும் மறுபுறம் உணவு பொருள்களால் கட்டுப்படுத்த முடியுமா என்பதையும் கூர்மையாக கவனித்து அதை செயல்படுத்தியும் பார்க்கிறார்கள். அந்த வகையில் ஆய்வுகளும் சர்க்கரை வியாதி இருப்பவர்கள் இதை சாப்பிடால் குறையும், கட்டுப்படும் என்று பலவித உணவு பொருள்களை பட்டியலிட்டு சொல்கிறது. அந்த வகையில் இன்று நாம் பார்க்க விரும்பும் பொருள் வெண்டைக்காய்.
வெண்டைக்காய் சாப்பிட்டா மூளை வரும்னு சொல்றது அந்த காலம், வெண்டைக்காய் சாப்பிட்டா சர்க்கரை கட்டுக்குள் அடங்கும்னு சொல்றது இந்த காலம். ஆமாங்க நம்புங்க தினமும் வெண்டைக்காய் 5 சாப்பிட்டா சர்க்கரை நல்லாவே கண்ட் ரோல் ஆகுதாம். எப்படின்னு பார்க்கலாமா?
தினமும் தூங்கும் போது 5 வெண்டைக்காயை எடுத்துக்கங்க. அதோட இரண்டு முனையையும் கட் பண்ணி, ஒரு அகலமான கிண்ணத்துல அந்த வெண்டைக்காய் ஊற அளவுக்கு 1 இல்லன்னா 2 தம்ளர் தண்ணி ஊத்துங்க. அடுத்த நாள் காலையில் எழுந்ததும் பல் தேய்ச்சு முடிச்சதும் இந்த வெண்டைக்காய் ஊறிய தண்ணீரை குடிச்சுடுங்க. அப்புறம் வெண்டைக்காயை மென்னு சாப்பிடுங்க.
அரைமணி நேரம் கழிச்சு அப்புறம் டீயோ காபியோ குடிங்க. தண்ணீர் குடிப்பதே கொஞ்சம் கஷ்டமா இருக்கும். இதுல எப்படி வெண்டைக்காய் மெல்றதுன்னு கேட்கறீங்களா நாள்பட்ட சர்க்கரை மாத்திரை போட்டு கட்டுப்படலன்னா இந்த வைத்தியம் நிச்சயம் கைகொடுக்கும். இதை பலரும் அனுபவத்தில் உணர்ந்து ஒப்புகொண்டிருக்கிறார்கள். தொடர்ந்தது ஒரு மாதம் குடித்து பார்த்தால் சர்க்கரை நிச்சயம் கட்டுக்குள் இருப்பதை உணரலாம்.
No comments:
Post a Comment