அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள, 'பயோமெட்ரிக்' வருகை பதிவு கருவிகளை, அதிகாரிகள் திரும்பப் பெறுவதால், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை பதிவில் முறைகேடுகளை தடுக்க, பயோமெட்ரிக் வருகை பதிவு முறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், கொரோனா காரணமாக, 2020 மார்ச்சுக்கு பின், பயோமெட்ரிக் முறை கைவிடப்பட்டது.
இதையடுத்து, அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அல்லது அவர்களின் அனுமதி பெற்ற பள்ளி அலுவலர்கள், மொபைல் போன் செயலி வழியாக, தினசரி வருகையை பதிவு செய்கின்றனர். இதில், பணிக்கே வராமல் பல ஆசிரியர்கள் வெளியே சுற்றினாலும், செயலியில் வருகை பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்த குளறுபடியை தடுக்க, மீண்டும் பயோமெட்ரிக் வருகை பதிவை அமல்படுத்த, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், மகளிருக்கு 1,000 ரூபாய் வழங்கும் பணிகளுக்கு பயோமெட்ரிக் கருவிகள் தேவைப்படுவதால், அரசு பள்ளிகளிடம் இருந்து அவற்றை திரும்பப் பெற உத்தரவிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment