Join THAMIZHKADAL WhatsApp Groups
பள்ளிகளில் உள்ள, 'கேன்டீன்'கள் உள்ளிட்டவற்றில் சிறுதானிய உணவுகள் பரிமாறுவது தொடர்பான அட்டவணையை தயாரித்து அனுப்பும்படி, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று, இந்தாண்டை சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா., சபை அறிவித்துள்ளது. இதையடுத்து, ஊட்டச்சத்துள்ள சிறுதானியங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மத்திய, மாநில அரசுகள் நடத்தி வருகின்றன.
சிறுதானியங்களை பிரபலப்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
அரசு பள்ளிகளில் வழங்கப்படும் இலவச மதிய உணவில் சிறுதானியங்களை சேர்க்கும்படி, அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதைத் தவிர பள்ளிகளில் உள்ள கேன்டீன்களில் சிறுதானிய உணவுப் பொருட்களை விற்க வேண்டும். இது தொடர்பாக கால அட்டவணையை அனுப்பும்படி, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது.
ஆனால், பல மாநிலங்கள் இந்த அட்டவணையை அனுப்பவில்லை.
இதையடுத்து, சிறுதானிய உணவுகளை பிரபலப்படுத்தும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்தக் கால அட்டவணையை தயாரித்து அனுப்பும்படி, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் நினைவூட்டல் அனுப்பியுள்ளது.
No comments:
Post a Comment