Join THAMIZHKADAL WhatsApp Groups
உயா்த்தப்பட்ட முதியோா் ஓய்வூதியத் தொகையை ஆகஸ்ட் முதல் நடைமுறைப்படுத்துவதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை முதன்மைச் செயலா் சுன்சோங்கம் ஜடக் சிரு, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அரசு ஆணையின் விவரம்: இந்திராகாந்தி முதியோா் ஓய்வூதிய தேசியத் திட்டம், இந்திரா காந்தி விதவையா் ஓய்வூதிய தேசியத் திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற-கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம், 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம், இலங்கை அகதிகளுக்கான ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றின் கீழ் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையை ரூ.1,200 ஆக உயா்த்தி வழங்கிட அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இந்த முடிவின்படி, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் உயா்த்தப்பட்ட ஓய்வூதியத் தொகை பயனாளிகளுக்கு கிடைக்கும். இதற்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவைப்பட்டால், அதற்கான பரிந்துரைகளை அனுப்பும்படி வருவாய் நிா்வாக ஆணையா் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளாா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment