Join THAMIZHKADAL WhatsApp Groups
மனித உடலில் இன்சுலின் சுரப்பு இயல்பாக இருந்தால் போதும் உணவில் இருக்கும் சர்க்கரையை நமக்கு தேவையான ஆற்றலாக மாற்றித் தருகிறது.
இந்த இன்சுலின் என்ற ஹார்மோன் நமது உடலில் சுரக்காமல் இருந்தால் தான் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் அதிகரிக்கிறது. நம் உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் சர்க்கரை நோய் வருகிறது. இக்காலகட்டத்தில் சர்க்கரை நோய் என்பது அதிக அதிக மக்களுக்கு உள்ளது.
சர்க்கரை நோயின் அறிகுறிகள்
அடிக்கடி தாகம் ஏற்படுவது அடிக்கடி சிறுநீர் கழிப்பது உடல் எடை குறைவது மற்றும் உடல் சோர்வு போன்றவை சர்க்கரை நோயின் அறிகுறிகள் ஆகும். எனவே இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக ரத்த பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
உங்களுக்கு சர்க்கரை நோய் என்பது வாழ்நாளில் வரவே கூடாது என்று நினைத்தால் இந்த பதிவில் சொல்லப்படும் மருந்தை தயார் செய்து சாப்பிட்டால் வாழ்நாளில் சர்க்கரை நோயே வராது. மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த மருந்தை தயார்.செய்து சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோயையும் கட்டுக்குள் வைக்கலாம். இந்த மருந்தை எவ்வாறு தயார் செய்வது, எப்படி உண்பது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவைப்படும் பொருட்கள்
மஞ்சள் பூசணி
மிளகு
சீரகம்
வெந்தயம்
உப்பு
நல்லெண்ணெய்
செய்முறை
முதலில் எடுத்து வைத்துள்ள மஞ்சள் பூசணிக்காயை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு மிக்சி ஜார் எடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள மஞ்சள் பூசணிக்காய், சீரகம், மிளகு, வெந்தயம் எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்சி ஜாரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து அந்த தண்ணீரை அரைத்த விழுது சேர்த்துக் கொள்ளவும். பிறகு நன்கு கலந்து கொண்டு தேவைக்கு ஏற்ற அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். பிறகு இதை நன்கு கலந்து கொள்ளவும்.
பிறகு இதில் நல்லெண்ணெய் சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும். பின்னர் இதை நன்கு கலந்து கொண்டு அப்படியே சாப்பிடலாம். இதை அப்படியே சாப்பிடும் பொழுது இதில் சேர்த்திருக்கும் பொருள்களில் உள்ள சத்துக்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்ததில் அதிகரிக்கும் சர்க்கரையை குறைத்து சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது.
சர்க்கரை நோய்க்கு மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள். இன்சுலின் போட்டு கொள்பவர்கள் அனைவரும் இதை சாப்பிடலாம். மருத்துவரின் ஆலோசனையை கேட்டு பின்னர் இதை தயார் செய்து சாப்பிடுங்கள்.
No comments:
Post a Comment