Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, July 23, 2023

புற்றுநோயிலிருந்து எய்ட்ஸ் வரை அனைத்தையும் குணப்படுத்தும் காய் இது தான்.!!

நம் மூதாதையர் ஆரோக்கியமான உணவு முறையினை பின்பற்றி உடல் ஆரோக்கியத்துடனும் சுறுசுறுப்புடன் வாழ்ந்தார்கள்.

ஆனால் நாம் இன்றைய காலத்தில் முப்பது, நாற்பது வயதுகளிலியே மாரடைப்பு, சர்க்கரைநோய் போன்ற நோய்களுக்கு உள்ளாவதுடன் நம் உயிரையும் மாய்த்துக் கொள்கின்றோம்.

இயற்கையானது நமக்கு வாரி தந்த கொடைகளை நாம் வீண் செய்கிறோம். இதனால் நம் வருமானத்தில் பாதி மருத்துவ செலவிற்கே செல்கிறது. ஆனால் நம் பழைய சந்ததியினர் இயற்கையின் மகிமையை உணர்ந்து செயற்பட்டார்கள். ஆகையால் ஆங்கில மருத்துவத்தை அவர்கள் நாட வேண்டிய தேவை உண்டாகவில்லை.அதலைக்காய் என்னும் அரிய அற்புத மருந்து மஹாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களான விருதுநகர், மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது.

நம்மில் பலர் அதலைக்காய் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த ஒரு காய் போதும் சர்க்கரைநோய், மஞ்சள் காமாலை, புற்றுநோய் என எந்த‌ நோயுமே நம்மை நெருங்காது என்று கூறினால் நம்புவீர்களா! நம்பி தான் ஆக வேண்டும்!

இந்தியாவில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த காய் பாகற்காய் வகையை சேர்ந்த ஒரு கொடி தாவரமாகும். இதிலுள்ள சத்துக்கள் நம்மை பலவகையான நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

மழைக்காலம் வந்தால் இது தானாகவே சாலையோரங்களிலும், விளைநிலங்களின் அருகிலும் விளையத்தொடங்கும். யாரும் விளைவிக்க வேண்டிய அவசியமில்லை. இது தென்மாவட்ட விவசாயிகளுக்கு முதலீடே இல்லாமல் இலாபம் தரக்கூடிய பயிராகும்.
இதிலுள்ள சத்துக்கள் முறையே கால்சியம், பொட்டாசியம், நீர்ச்சத்து, புரதம் என இதில் உள்ள சத்துக்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இத்தனை சத்துக்கள் நிறைந்த இதை நாம் கவனிக்காமல் இருப்பது நமது அறியாமை என்றே கூற வேண்டும்.

அதலைக்காயில் பாகற்காயை போன்றே கசப்பு சுவை உள்ளதால் பெரும்பலானோர் இதனை உண்பதில்லை. ஆயினும் இதன் மகிமையை அறிந்தவர்கள் ஒருபோதும் இதை வெறுக்க மாட்டார்கள். இதனை பொரியலாகவோ அல்லது புளி குழம்பாகவோ சமைத்து சாப்பிடலாம். சாம்பாராக வைக்க இயலாது.

பாகற்காயை போன்றே சரியான பக்குவத்தில் சமைத்தால் சுவையிலும், சத்துகளிலும் இதனை மிஞ்ச வேறு காய்கறிகளே இல்லை என்றே கூற வேண்டும்.

No comments:

Post a Comment