Join THAMIZHKADAL WhatsApp Groups
ரயிலில் பயணம் செய்வதற்கு அதற்காக முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். நேரடியாக டிக்கெட் கவுண்டருக்கு சென்று டிக்கெட் வாங்குபவர்களை விட ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்பவர்கள் தான் அதிகம்.
இதன் மூலம் வீண் அலைச்சலை தவிர்க்கலாம். ஐஆர்சிடிசி வெப்சைட் அல்லது ஆப் மூலமாக டிக்கெட்டை புக் செய்து கொள்ளலாம். நிறைய பேர் கடைசி நேரத்தில் டிக்கெட் புக் முன்பதிவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். அப்போது தட்கல் டிக்கெட் எடுப்பதை தவிர வேறு வழியே இருக்காது.
இந்த சூழ்நிலையில் பயணிகளுடைய வசதியை கருத்தில் கொண்டு டிக்கெட் ரத்து செய்தாலும் நிதி இழப்பு ஏற்படாமல் இருக்க இந்திய ரயில்வே சில விதிகளை வகுத்துள்ளது. அதாவது டிக்கெட் முன்பதிவை செய்வதற்கு முன் தட்கல் டிக்கெட் ரத்து செய்தால் எவ்வளவு பணம் திரும்ப கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ள முடியும். தட்கல் டிக்கெட் முன்பதிவு ரத்து செய்தால் ஐஆர்சிடிசி எப்படி பணத்தை திருப்பி கொடுக்கிறது என்பதை பெரும்பாலும் மக்களுக்கு தெரியாது. ஆன்லைனில் திட்டத்தை முன்பதிவு செய்திருந்தால் டிக்கெட் அட்டவணையை தயாரிக்கும் வரை காத்திருப்பு பட்டியலில் இருந்தால் உங்களுடைய டிக்கெட் தானாகவே ரத்து செய்யப்படும். அதன் பிறகு அடுத்த சில நாட்களில் டிக்கெட் தொகை வங்கி கணக்கிற்கு வந்துவிடும்.
No comments:
Post a Comment