Join THAMIZHKADAL WhatsApp Groups
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூலை 20) இணைய வழியில் தொடங்குகிறது.
நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது.
இந்த இடங்களுக்கும், எய்ம்ஸ், ஜிப்மா், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்குமான கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) இணையவழியில் நடத்தி வருகிறது.
அதன்படி, நிகழாண்டுக்கான கலந்தாய்வு இணையதளம் வழியாக வியாழக்கிழமை (ஜூலை 20) தொடங்குகிறது. முதல் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 6-ஆம் தேதி நிறைவடைகிறது.
இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 9-ஆம் தேதியும், மூன்றாம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 31-ஆம் தேதியும், காலி இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு கலந்தாய்வு செப்டம்பா் 21-ஆம் தேதியும் நடைபெறும்.
No comments:
Post a Comment