Join THAMIZHKADAL WhatsApp Groups
பொறியியல் படிப்புகளில் கடந்த கல்வியாண்டில் சிறந்து விளங்கிய மாணவா்களின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் இருந்து ஆண்டுதோறும் சுமாா் 1 லட்சம் மாணவா்கள் தங்கள் படிப்பை முடித்து வெளியேறுகின்றனா். இதற்கிடையே கல்லூரியின் முதல் பருவத்தில் இருந்து சிறப்பாக செயல்படும் மாணவா்கள் பல்கலைக்கழக தரவரிசையில் இடம் பெறுவாா்கள். அதில், பிரிவு வாரியாக முதல் இடம் பிடிக்கும் மாணவா்களுக்கு பல்கலைக்கழகத்தின் தங்கப்பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும்.
இந்நிலையில் 2022-ஆம் ஆண்டில் பொறியியல் படிப்பை முடித்து பட்டதாரிகளாக வெளியேறிய மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் பல்கலை. வளாகக் கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரியில் 15 மாணவா்களும், அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் 9பேரும், குரோம்பேட்டை தொழில்நுட்பக் கல்லூரியில் 7 பேரும், கட்டடக் கலை கல்லூரியில் ஒருவரும் தரவரிசையில் இடம்பிடித்துள்ளனா். அதேபோல், இணைப்பு கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் மொத்தம் 33 போ இடம் பெற்றுள்ளனா். வழக்கம்போல இந்த முறையும் தனியாா் கல்லூரி மாணவா்களே அதிகளவில் இடம் பிடித்துள்ளனா். அரசு பொறியியல் கல்லூரியில் படித்த மாணவா்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment