Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, July 2, 2023

வேர்க்கடலை சாப்பிட்டு தண்ணீர் குடிக்க கூடாது ஏன் தெரியுமா ?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
வேர்க்கடலையைசாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது என்று பலரும் அறிவுறுத்துவதை பார்த்திருப்போம்.அதற்கான விடையைத் தான் நீங்கள் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.

வேர்க்கடலையை உண்ட உடனே அருந்துவதால், தொண்டையில் இருமல் மற்றும் எரிச்சல் உணர்வு தூண்டும்.

இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகையில், நட்ஸ் அல்லது எண்ணெய் சத்து அதிகம் உள்ள உணவுகளை உணவுகளை உட்கொண்ட பின் தண்ணீரை உட்கொள்வதால் உணவுக் குழாயில் கொழுப்பு படியும் வாய்ப்பு உருவாகும்.

உடனே தண்ணீர் குடிப்பதால் தொண்டை எரிச்சல் மற்றும் இருமல் ஏற்படும். எனவே தான் வேர்க்கடலையைசாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று கூறப்படுகிறது. உங்களுக்கு நட்ஸ் அலர்ஜி இருந்தால் வேர்க்கடலையைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

அதனை மீறி எடுத்துக் கொள்வதோடு, அதனுடன் சேர்த்து தண்ணீர் அருந்துவதன் மூலம் மூச்சுத்திணறல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.


ஏன் தாகம் எடுக்கிறது?

இயற்கையாகவே வேர்க்கடலை வறட்சித்தன்மை உடையது. அதனால் தான் வேர்க்கடலை சாப்பிட்ட உடன் தாகம் எடுக்கிறது. வேர்க்கடலை போன்ற எண்ணெய்ச் சத்து உணவுகளை உட்கொண்ட பிறகு, உணவுக்குழாயில் கொழுப்புகள் குவியும், அதனால் இருமல் உண்டாகும். அப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.

புரதம் மற்றும் நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரமான வேர்க்கடலை டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். தினமும் வேர்க்கடலை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல் இதய நோய் அபாயத்தையும் குறைக்கும். நீரிழிவு நோயாளியின் இரத்த சர்க்கரை அளவையும் வேர்க்கடலை கட்டுப்படுத்துகிறது மற்றும் நீரிழிவு நோயின் வளர்ச்சியை முதலில் தடுக்கிறது. தினமும் 28-30 வேர்க்கடலை சாப்பிடலாம்.

நீரிழிவு நோயாளிகள் மட்டும் இல்லை அனைவரும் வேர்க்கடலை சாப்பிடலாம்.யாராக இருந்தாலும் வேர்க்கடலை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிக்க வேண்டாம்.அதனால் வேர்க்கடலை சாப்பிட்ட பின் குறைந்தபட்சம் 10 நிமிடங்களுக்குப் பின் தண்ணீர் குடிக்கலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News