Join THAMIZHKADAL WhatsApp Groups
முருங்கைகீரை உங்கள் நோய்களை குணப்படுத்தி, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது.முருங்கைகீரை சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் மாமருந்தாகும்.
இந்த முருங்கை கீரையை தினமும் உணவில் ஒரு கைப்பிடி அளவாவது சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த அற்புத மருத்துவ குணத்தை கொண்ட முருங்கைகீரையை பொரியல் செய்து சாப்பிடுவதற்கு பதிலாக காலையில் நாம் சாப்பிடும் தோசையில் போட்டு முருங்கை கீரை தோசையாக செய்து சாப்பிடலாம். அது எப்படியென்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையானவை
முருங்கைக்கீரை
தோசை மாவு அல்லது
கோதுமை மாவு
சிறிய வெங்காயம்
செய்முறை
முதலில் உங்களுக்கு தேவையான தோசை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். அது அரிசி மாவாக இருக்கலாம் அல்லது கோதுமை மாவாகவும் இருக்கலாம். இந்த தோசை மாவுடன் ஒரு கைப்பிடி அளவு முருங்கைகீரை மற்றும் சிறியதாக நறுக்கிய சிறிய வெங்காயம் இரண்டையும் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளுங்கள். பின் தோசை கல்லில் ஊற்றி தோசை செய்து கொள்ளலாம்.
மற்றொருமுறை
முருங்கைகீரையை மாவில் கலக்காமல், தோசை கல்லில் மாவை ஊற்றிவிட்டு அதன் மேல் முருங்கைகீரை தூவி வேக வைத்தும் எடுக்கலாம். எப்படி எடுத்தாலும் இந்த முருங்கைகீரை தோசை நல்ல மணமாகவும், சுவையாகவும் இருக்கும். இதை ஆம்லெட் செய்தும் சாப்பிடலாம். முருங்கை கீரை, வெங்காயம் எண்ணெயில் வதக்க தேவையில்லை. அப்படியே பச்சையாகவே மாவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
நீங்களும் இதை ட்ரை பண்ணி பாருங்க. இது சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல அனைவருமே சாப்பிடலாம். ஆனால் சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் வாரத்தில் 4 தினங்களாவது இந்த தோசை செய்து சாப்பிடுங்க, சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வருவதை உணர முடியும்.
No comments:
Post a Comment