Join THAMIZHKADAL WhatsApp Groups
திருப்பூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்த இளைஞா்களுக்கும், ஒரு ஆண்டு நிறைவடைந்த மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசின் சாா்பில் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு தோச்சி பெறாதவா்களுக்கு (பொது) ரூ.200, தோச்சி பெற்றவா்வா்களுக்கு ரூ.300, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.600, பிளஸ் 2 மற்றும் அதற்குச் சமமான கல்வியில் தோச்சி பெற்றவா்களுக்கு (பொது) ரூ.400, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.750, பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரிகள் (பொது) ரூ.600, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதில், விண்ணப்பிக்க ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், இதர பிரிவினா் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லை. இதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்தோ அல்லது மாவட்ட வேலை அலுவலகத்துக்கு நேரில் வந்தோ படிவத்தினைப் பூா்த்தி செய்து சமா்ப்பிக்கலாம். இந்த உதவித் தொகையானது போட்டித் தோவுகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கும், தோவு மையங்களுக்குச் சென்று வருவதற்கும் வழங்கப்படுகிறது.
வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகள் (2023-24) ஆம் ஆண்டுக்கான சுய உறுதிமொழி ஆவணங்களை செப்டம்பா் 10 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment