Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, July 22, 2023

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை...?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
அண்ணா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் ஆய்வு மையத்தில் மேற்கொள்ளப்பட உள்ள சுற்றுச்சூழல் தணிக்கை ஆகிய பணிகளுக்கு, தற்காலிக அடிப்படையில் ஊழியர்கள் நியமனத்துக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தகுதி, ஆர்வமுள்ள நபர்கள் ஜூலை 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம்: விளையாட்டு வாரியம், அண்ணா பல்கலைக்கழகம்.

மேலாண்மை: மாநில அரசு


பணி விவரம்

Ø Project Associate-I

Ø Project Associate-II

Ø Analyst

Ø Field Assistant

Ø Project Assistant

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.07.2023

கல்வித் தகுதி

பதவிக்கு ஏற்ற கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவத்தை பொறுத்தவரை, பதவிகளுக்கு ஏற்ப மாறுபடுகிறது. அதுகுறித்த அறிவிப்பை, கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளவும்.

பணி காலம்: ஆறு மாதங்கள்

ஊதியம்: பணிக்கு ஏற்றவாறு குறைபட்சம், ரூ. 10,000 முதல் ரூ.28,000 வரை வழங்கப்படும்.

தேர்வு முறை

இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

நோட் இட் ப்ளீஸ்...!

இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நிரப்படும். பணியின் காலம் ஆறு மாதம்.

மறக்காதீங்க...!

Ø விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கோரப்பட்ட தகவல், அது சார்ந்த சான்றிதழுடன் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை மின்னஞ்சலிலும் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

31.07.2023 ஆம் தேதி மாலை 5:00 மணிக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

Ø நேர்காணல் நடக்கும் நாளில் விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களை உடன் எடுத்த வர வேண்டும்.

Ø தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல் நடக்கும் நாள் மற்றும் தேதி குறித்த அறிவிப்பு, அவர்களின் மின்னஞ்சல் வாயிலாக தெரியப்படுத்தப்படும்.

Ø சொந்த செலவில் தான் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். இதற்கான பயண செலவு தொகை எதையும் கோர முடியாது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

Director,

Centre for Environmental Studies,

College of Engineering Guindy,

Anna University,

Chennai 600 025

என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். directorcesau@qmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

க்ளிக் ப்ளீஸ்....!


No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News