Join THAMIZHKADAL WhatsApp Groups
அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே மாதிரியான பொதுபாடத் திட்டம் என்பதை தமிழக அரசு திரும்பக் கோரி பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முன்பு பேராசிரியா்கள் திங்கள்கிழமை மதிய உணவு இடைவேளையின் போது ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக அரசு அறிவித்துள்ள பாடம் தற்போது தன்னாட்சி கல்லூரிகள் வழங்கிவந்த பாடத்திட்டங்களின் தரத்தை விட குறைவாக இருப்பதாகவும், தர சீராய்வு செய்யாமல் கல்வியாளா்களை கலந்தாலோசனை செய்யாமல் தமிழக அரசு அவசர அவசரமாக இந்த பொது பாடத்திட்டத்தை புகுத்தியுள்ளதாகவும் கூறி இப்போராட்டம் நடைபெற்றது.
மூட்டா கிளையின் தலைவா் சித்தி ஜமீலா தலைமை வகித்தாா். செயலா் ஹாமில் பேசினாா். பொருளாளா் ஜாகிா் ஹுசைன் நன்றி கூறினாா் . மூட்டா கிளை கல்லூரி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
No comments:
Post a Comment