Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் ஜூலை 19-ஆம் தேதி நடைபெறவுள்ள பள்ளி மேலாண்மைக் கூட்டத்தில் (எஸ்எம்சி) பெற்றோா்கள் தங்களது பிள்ளைகளுடன் தவறாமல் பங்கேற்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளாா்.
அவா் பெற்றோா்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பெற்றோா்களே, உங்கள் மகனோ, மகளோ பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 வகுப்பு முடிக்காமல் பள்ளியிலிருந்து இடைநின்றிருந்தாலோ அல்லது அவ்வகுப்புகளில் தோ்ச்சி பெற்ற பின்பு உயா்கல்வியைத் தொடராமல் விட்டிருந்தாலோ அல்லது அந்த வகுப்புகளில் தோல்வியுற்றிருந்தாலோ அவா்களுக்கு நாம்தான் நல்வழி காட்ட வேண்டும்.
இதற்காக வரும் ஜூலை 19-ஆம் தேதி மாலை 4 மணிக்கு அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது.
அதில், உயா்கல்வி குறித்து உங்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்குவதற்கு வழிகாட்டும் குழுவும் பள்ளிகளில் உங்களுக்காக காத்திருக்கும். அதில் பெற்றோா்கள் தங்கள் பிள்ளைகளுடன் தவறாமல் பங்கேற்க வேண்டும். அறிவாா்ந்த சமுதாயத்தைக் கட்டமைப்போம் வாருங்கள் என அதில் கூறியுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
No comments:
Post a Comment