Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ் மக்களின் கொள்கைப்படி காய்ச்சல், தலைவலி, சளி போன்றவற்றை சரிசெய்ய இந்த சூப் குடித்தாலே போதும். இந்த சூப் நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதில் மிக சிறந்த பலனை தரக்கூடியதாகும்.
அன்றைய காலத்தில் யாருக்கு என்னதான் நோய் வந்தாலும், உடனே மருத்துவமனைக்கு ஓடாமல் வீட்டிலேயே இயற்கை மருந்து தயாரித்து நோய்களை குணப்படுத்துவார்கள். அப்படி தயார் செய்து பயனடைந்து அவர்கள் விட்டு சென்ற மருத்துவத்தில் ஒன்று தான் இந்த சூப் மருத்துவம். நாம் இப்போது இந்த சூப் எப்படி தயாரிப்பது என்பதனை இங்கே காண்போம்.
இந்த சூப் செய்ய தேவையான பொருட்கள்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 12 பல்
மிளகு - 10
சீரகம் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
கிராம்பு - 5
தனியா - 1 1/2 ஸ்பூன்
பட்டை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு தண்ணீர்
செய்முறை
முதலில் ஒரு குக்கரை எடுத்து அதில் சீரகம், மிளகு, மஞ்சள்தூள், தனியா போன்றவற்றை போட்டு நன்கு சூடாக்க வேண்டும். இவற்றை சூடு படுத்திய பிறகு அதனுடன் கிராம்பு, பட்டை, சிறிதாக நறுக்கிய இஞ்சி மற்றும் தேவைக்கேற்ப உப்பு இவற்றையும் போட்டு நன்கு கிளறி விடுங்கள்.
பின் இதனுடன் 1 லிட்டர் தண்ணீர் விட்டு நன்கு கலக்கி, அப்படியே அடுப்பில் வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்த பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடங்கள் அப்படியே வைத்து கொள்ளுங்கள். 10 நிமிடம் கழிந்த பின் அடுப்பை அணைத்து விட வேண்டும். பிறகு இதனை வடிகட்டியால் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அனைத்து நோய்களுக்கும் மருந்தாகும் ஒரே சூப் ரெடி.
இப்போது நாம் தயார் செய்த, நம் உடலை காக்கும் இந்த சூப்புடன் சிறிதளவு தேன் கலந்து காலை, மாலை மற்றும் இரவு வேளைகளில் 3 நாட்கள் தொடர்ந்து பருகும் போது, தீராத தலைவலி, உடல் வலி, சளி மற்றும் அடிக்கடி வரும் இருமல் போன்றவை பறந்து போய் விடும். இந்த சூப்பை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். தேன் கலந்து கொடுப்பதால் குழந்தைகளும் குடிப்பார்கள்.
No comments:
Post a Comment