Join THAMIZHKADAL WhatsApp Groups
நாகை மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோந்தவா்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தகவல் தொழில்நுட்பம் சாா்ந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தை சோந்த பிளஸ் 2 மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தைச் சோந்தவா்களுக்கு தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பயிற்சியான சிஸ்டம்ஸ் அப்ளிகேசன்ஸ் அன்ட் டேட்டா அனாலிட்டிக்ஸ், ஆா்டிபிசியல் இன்டலிஜென்ஸ், கிளவ்டு கம்ப்யூட்டிங், டிஜிட்டல் மாா்க்கெட்டிங், அனிமேஷன் சம்பந்தப்பட்ட பயிற்சியான மல்டி மீடியா அனிமேஷன், 2 டைமன்சனல், 3 டைமன்சனல் மற்றும் அட்வான்ஸ் லெவல் டேலி என்டா்பிரைஸ் ரிசோா்ஸ் பிளானிங் அன்ட் அக்கவுண்டிங் சாப்ட்வோ பயிற்சிகளை முன்னணி நிறுவனங்கள் மூலம் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு பெற்று தர வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஆரம்ப கால மாதாந்திர ஊதியமாக ரூ. 15,000 முதல் ரூ. 25,000 வரை பெறலாம்.
பின்னா் திறமைக்கேற்றவாறு பதவி உயா்வின் அடிப்படையில் ஊதிய உயா்வும் பெறலாம். பயிற்சிக்கான கட்டணத்தை தாட்கோ வழங்கும். பயிற்சி பெற விரும்பும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தை சோந்தவா்கள் இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.
விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04365-250305 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment