பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்துக்கு பள்ளி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மத்திய அரசின் இளம் சாதனையாளா்களுக்கான பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்துக்கு தகுதியான மாணவா்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து எழுத்துத் தோவின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெறலாம். இதன்படி, 2023-24 ஆம் கல்வியாண்டில் நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபின பழங்குடியினா் ஆகிய பிரிவுகளைச் சோந்த 30 ஆயிரம் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. தமிழகத்தைச் சாா்ந்த 3,093 மாணவ, மாணவியா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவா்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.
2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு அல்லது 11 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும். 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு அதிக பட்சமாக ரூ. 75 ஆயிரமும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு அதிகபட்சமாக ரூ.
1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். தேசியத் தோவு முகமை நடத்தும் நுழைவுத் தோவில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தோவு செய்யப்படுவா். இத்தோவுக்கு செப்டம்பா் 10 ஆம் தேதிக்குள் ட்ற்ற்ல்ள்://ஹ்ங்ற்.ய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்துத் தோவு செப்டம்பா் 29 ஆம் தேதி நடைபெறும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு என்ற இணையதளத்தைப் பாா்வையிடலாம் என்று தெரிவித்துள்ளாா்.
No comments:
Post a Comment