Join THAMIZHKADAL WhatsApp Groups
கண்பார்வை கோளாறு சரி செய்து கண் பார்வை தெளிவாக்கும் முறை.இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால், பலருக்கும் கண்பார்வை பிரச்சனை அதிகம் உள்ளது.
இதற்கு நீண்ட நேரம் கம்ப்யூட்டர் மற்றும் தொலைக்காட்சியின் முன் இருப்பது தான் முக்கிய காரணம் என்பது அனைவருக்குமே தெரியும்.
ஒருவரது கண்பார்வை பலவீனமாவதற்கு மரபணுக்கள், முதுமை, கண்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் அல்லது போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமை போன்றவற்றால் கூட இருக்கலாம்.
அதிலும் மங்கலான பார்வை, கண்களில் இருந்து நீர் வடிதல் அல்லது நாள்பட்ட தலைவலி போன்றவை பலவீனமான கண்பார்வையின் அறிகுறிகள்.
இந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால், அதனால் பல்வேறு தீவிர பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.
எனவே இது போன்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்.நாம் இப்பொழுது இரண்டு விதமான ரெமடியை பார்க்கலாம் அதாவது உள்புறர் மற்றும் வெளிப்புறத்தில் இருக்கும் பிரச்சனைகள்.
முதலில் உள்புற பிரச்சினைகளுக்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
திரிபலா பொடி
ஜாதிக்காய் பொடி
செய்முறை:
1: முதலில் 4 டேபிள்ஸ்பூன் திரிபலா பொடி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஜாதிக்காய் பொடி சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். பின்பு பெரியவர்களாக இருந்தால் ஒரு டேபிள் ஸ்பூன் அந்த பவுடரை எடுத்துக் கொள்ளலாம் அல்லது பத்து வயதிற்கு கீழே இருந்தால் கால் டேபிள்ஸ்பூன் அந்த பவுடரை எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு டேபிள் ஸ்பூன் அந்த பவுடரை எடுத்து அதில் சுத்தமான உருக்கிய நெய் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் பிறகு மதியம் உணவுக்கு முன்பு இதனை சாப்பிட வேண்டும்.
இதுபோன்று ஒரு நாளைக்கு இரண்டு முறை பத்து நாட்கள் எடுத்து வந்தால் கண் பார்வை போன்ற பிரச்சனைகள் தீர்ந்து விடும்.
நீங்கள் புதியதாக கண்ணாடி போட்டால் இதனை ஒரு 10- 15 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம் அல்லது ஒரு வருடம் இரண்டு வருடம் ஆக கண்ணாடி போட்டு வந்தால் இதனை 30 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம் அல்லது ஐந்து வருடத்திற்கு மேல் கண்ணாடி போட்டு வந்தால் இதனை ஒரு 48 நாட்கள் ஆவது எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து வெளிபர பூச்சா பயன்படும் ரெமிடி.
தேவையான பொருட்கள்:
ஜாதிக்காய் பொடி
பசும்பால்
செய்முறை:
முதலில் கால் டேபிள்ஸ்பூன் ஜாதிக்காய் பொடி மற்றும் காய்ச்சாத பசும்பால் சிறிதளவு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும் இதனை இரவு நாம் தூங்கும் முன்பு நம் கண்களில் உள்ள வெளிப்புறத்தில் நன்றாக தேய்த்து இரவு முழுவதும் விட்டு காலையில் எழுந்தவுடன் முகத்தை கழுவ வேண்டும்.
அந்த ஹோம் ரெமெடியுடன் இதனையும் சேர்த்து நாம் செய்து வந்தால் நல்ல ஒரு பலன் கண்டிப்பாக கிடைக்கும்.
No comments:
Post a Comment