Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழக அளவில் இளம் பல்கலைக்கழக தரவரிசையில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் முதலிடம் பெற்றது.
லன்டன் டைம்ஸ் உயர்கல்வி நிறுவனம் 2023ம் ஆண்டுக்கான இளம் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலை ஜூலை 3-ம் தேதி வெளியிட்டது. இதில் கடந்த 1972-ம் ஆண்டு முதல் நிறுவப்பட்ட இளம் கல்வி நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதன்படி 963 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன. கடந்த 2022-ம் ஆண்டு தரவுகள் அடிப்படையில் கற்பித்தல், ஆராய்ச்சி, அறிவு பரிமாற்றம், சர்வதேச கண்ணோட்டம், தொழில்துறை வருமானம் ஆகிய 5 பிரிவுகளில் கல்வி நிறுவனங்களின் செயல்திறன் மதிப்பீடு செய்யப்பட்டன.
இதில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் உலக அளவில் 101-150-வது இடத்தை பெற்றது. உயர்க் கல்வி நிறுவனங்களில் இந்திய அளவில் 4-வது இடம், தமிழக அளவில் முதலிடம் பெற்றது. தரவுகளை சிறப்பாக சமர்ப்பித்த பல்கலைக்கழக தரவரிசைப் பிரிவின் இயக்குநர் ஜெ.ஜெயகாந்தன் தலைமையிலான குழவினர் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், முதுகலை மாணவர்களை துணைவேந்தர் க. ரவி பாராட்டினார்.
மேலும் ஏற்கனவே இப்பல்கலை.,-க்கு தேசிய தர நிர்ணய குழு (நாக்) ‘ஏ பிளஸ்’ அங்கீகாரம் வழங்கியது. தேசிய மனித வளத்துறை தரிவரிசையில் 30-வது இடம், உலக தரவரிசையில் உலக அளவில் 401-500-வது இடம், டைம்ஸ் நிறுவ தரவரிசையில் ஆசிய அளவில் 111-வது இடம், கியு.எஸ். நிறுவன தரிவரிசையில் ஆசிய அளவில் 251-260-வது இடம், தெற்காசிய அளவில் 51-வது இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment