கால்சியம் குறைபாடு, இரும்பு சத்து குறைபாடு, ஹீமோகுளோபின் குறைபாடு, உடல் சோர்வு, உடல் அசதி, கை கால் வலி, மூட்டு வலி, அதிகப்படியான முடி உதிர்வு பிரச்சனை, கண் பார்வை குறைபாடு, வாய்ப்புண், நெஞ்செரிச்சல், அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் என அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து 80 வயதுகளிலும் 20 வயது போல ஆரோக்கியமாக வைத்திருக்கக் கூடிய ஒரு தேவாமிர்தமான பாலை எவ்வாறு செய்வது என்பதை இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பால்
உலர் திராட்சை
கசகசா
பட்டை
பொருட்களின் பயன்கள்:
பாலில் கால்சியம் சத்து மிகுந்து காணப்படுகிறது. அதேபோல உலர் திராட்சைகளிலும் கால்சியம் சத்து மிகுந்து காணப்படுவதால் மலச்சிக்கல் பிரச்சனைகள் நிரந்தரமாக குணமடையும். எலும்புகளுக்கு உறுதியையும் அளிக்கும்.
மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள கசகசாவில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. நம் தினமும் கண்ட கண்ட எண்ணெயில் செய்த உணவுகளை தினமும் எடுத்துக் கொள்கிறோம். இதனால் நம் உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரிக்கிறது. இதனால் இருதய கோளாறுகள் ஏற்படுகிறது எனவே இந்த கசகசாவில் இருக்கின்ற நார் சத்தானது உடம்பில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும்.
மேலும் இந்த கசகசாவானது ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பு செய்யவும், முடி உதிர்வு பிரச்சனையை தீர்க்கவும், கண் பார்வை குறைபாட்டை நீக்கவும், கால்சியம் இரும்புச்சத்து குறைபாட்டை நீக்கவும், எலும்பிற்கு நல்ல ஒரு உறுதியை கொடுக்கவும், ஹீமோகுளோபின் குறைபாட்டை நீக்கவும் என அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த கசகசா ஒரு தீர்வாக உள்ளது. எனவே இந்த பாலில் நாம் சேர்க்கப்படக்கூடிய இந்த பொருட்களால் நம் உடம்பின் ஆரோக்கியம் மிகுந்து காணப்படும்.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் அளவு பாலை எடுத்துக் கொள்ள வேண்டும்( எப்போதும் அடர்த்தி மிக்க பாலை எடுத்துக் கொள்ளாதீர்கள் அரை கிளாஸ் பால் என்றால் அரை கிளாஸ் தண்ணீர் என்ற விகிதத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்). இந்த பாலுடன் பத்து உலர் திராட்சைகளை சேர்த்துக் கொள்ளவும். மேலும் இதனுடன் ஒரு ஸ்பூன் கசகசா மற்றும் ஒரு துண்டு பட்டையை சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு அடுப்பில் நன்றாக கொதிக்க வைத்து பிறகு ஒரு கிளாஸில் எடுத்துக் கொள்ளவும். இதை வடிகட்டியும் குடித்து வரலாம் அல்லது வடிகட்டாமல் அப்படியேவும் குடித்து வரலாம்.
இவ்வாறு காய்ச்சிய இந்த பாலில் சுவைக்காக ஒரு ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் சர்க்கரை வியாதி இருப்பவர்கள் நாட்டுச்சர்க்கரை தவிர்க்க வேண்டும். இந்தப் பாலை இரவு உணவு உண்ட பிறகு தூங்குவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பு குடித்துவிட்டு தூங்க வேண்டும். இந்தப் பாலை வாரத்திற்கு மூன்று முறை குடித்தாலே போதும்.
இவ்வாறு இந்த பாலை குடிப்பதால் மலச்சிக்கல் பிரச்சனைகள் தீர்ந்து ரத்தம் நன்கு சுத்திகரிப்பு ஆகும்.
No comments:
Post a Comment