Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, July 16, 2023

இரத்த அழுத்தம் இருக்கவங்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன..?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
உயர் ரத்த அழுத்தம் என்பது நமது வாழ்க்கைக்குள் சைலன்டாக நுழைந்து ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்தை ஏற்படுத்தி விடும் ஒரு பிரச்சனை ஆகும்.

ஹை BP என்று நம்மிடையே பொதுவாக சொல்லப்படும் இது நமது ஆரோக்கியத்தில் பல தாக்கங்களை ஏற்படுத்துகிறது. நமது ரத்த நாளங்களின் சுவரை ரத்தமானது அதிக வீரியத்துடன் தள்ளும் போது உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவதே உயர் ரத்தம் அழுத்தம் ஏற்பட முக்கிய காரணம் ஆகும். நீங்கள் உடல் பருமனாக இருந்தாலோ, அதிக உப்பு எடுத்துக் கொண்டாலோ, மன அழுத்தம் அதிகமாக வைத்திருந்தாலோ அல்லது உடற்பயிற்சி செய்யாத ஒரு நபராக இருந்தாலோ உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஒரு சிலருக்கு வயது காரணமாகவும் அல்லது குடும்ப வரலாறு காரணமாகவும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படலாம். தலைவலி, மங்கலான பார்வை, குமட்டல், மூக்கில் இருந்து ரத்தம் வடிதல், மயக்கம், நெஞ்சுவலி, வலிப்பு மற்றும் மூச்சுத் திணறல் போன்றவை ரத்த அழுத்தத்தின் ஒரு சில அறிகுறிகள்.

நமது வாழ்க்கை முறையில் ஒரு சில மாற்றங்களை செய்வதன் மூலமாக ரத்த அழுத்தத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியும். எல்லா ஊட்டச்சத்துக்களும் அடங்கிய பேலன்ஸ்டு டயட்டை சாப்பிடுவதன் மூலமாகவும், சோடியம், சேச்சுரேட்டட் ஃபேட் அல்லது சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்ப்பதன் மூலமாகவும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

உயர் ரத்த அழுத்தம் என்பது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவாது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பலர் தங்களுக்கு உயரத்த அழுத்தம் இருப்பது தெரியாமலேயே வாழ்கின்றனர். உடல் பருமன் மற்றும் வகை 2 நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படவும், அதன் விளைவாக பக்கவாதம் உண்டாகவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆகவே உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதை அறிந்து அதனை வேரோடு அழிப்பது மிகவும் அவசியம்.

டயட்ரி அப்ரோச்சஸ் டு ஸ்டாப் ஹைப்பர்டென்ஷன் (Dietary Approaches to Stop Hypertension) அல்லது DASH டயட் என்று சுருக்கமாக சொல்லப்படும் உணவு முறையானது உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள ஆரோக்கியமான ஒரு உணவு முறையாகும். இந்த உணவு முறையில் குறிப்பாக சோடியம் சேச்சுரேட்டட் ஃபேட் மற்றும் சர்க்கரை போன்ற உணவுகள் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் சேர்க்கப்படுகிறது.

உயர் ரத்த அழுத்தம் கொண்ட நபர்கள் என்ன சாப்பிட வேண்டும்?

உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் தினமும் ஒரு டீஸ்பூனுக்கும் குறைவான உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்துகிறது. சர்க்கரையைத் தவிர மறைமுகமாக சோடியம் சேர்க்கப்பட்ட பேக்கரி ஐட்டங்கள், ப்ராசஸ் செய்யப்பட்ட சீஸ், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, ரெடிமேட் உணவுகள், பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள், சோடா, சாஸ் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். பொதுவாக பேக்கேஜ செய்யப்பட்டுள்ள எல்லா வகையான உணவுகளிலும் சோடியம் ஒரு பிரிசர்வேட்டிவ்வாக பயன்படுத்தப்படுகிறது.


உயர் ரத்த அழுத்தம் கொண்ட நபர்களுக்கான ஒரு சில டயட் டிப்ஸ்கள்:


பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் ரத்த அழுத்தத்தை சீராக உதவுவதால் ஹை BP கொண்ட நபர்கள் இவற்றை தங்களது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பீன்ஸ், பருப்பு வகைகள், பால், தயிர், காட்டேஜ் சீஸ், பெர்ரி பழங்கள், சிட்ரஸ் பழங்கள், இளநீர், பச்சை இலை காய்கறிகள், சியா விதைகள், பாதாம் பருப்பு, பூசணி விதைகள், வால்நட்ஸ் போன்றவற்றில் இந்த தாதுக்கள் அதிக அளவில் காணப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த உணவுகளில் அதிக உணவு நார்ச்சத்து இருப்பதன் காரணமாக இது தமனிகளில் ப்ளேக் உருவாவதை தடுப்பதன் மூலமாக ஹார்ட் அட்டாக் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதை தவிர்க்கிறது.

எல்லா ஊட்டச்சத்துக்களும் அடங்கிய பேலன்ஸ்டு டயட், போதுமான அளவு தண்ணீர் பருகுதல், போதுமான அளவு தூக்கம் பெறுதல், உடற்பயிற்சி போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதும் சமமாக முக்கியமாக கருதப்படுகிறது.

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் சில பழங்கள்:

வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் அதிக அளவில் காணப்படுகிறது. இது ரத்த அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவக்கூடிய தாதுக்கள் ஆகும்.

ஸ்ட்ராபெரி பழத்தில் காணப்படும் ஒரு ஆன்டிஆக்சிடன்டான அந்தோசயனின், வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் கொழுப்பு அமிலங்கள் உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தர்பூசணி பழத்தில் குறைந்த அளவு சோடியமும், அதிக அளவு நீர்ச்சத்தும் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், லைகோபின் மற்றும் பிற ஆன்டி-ஆக்சிடன்டுகள் இருப்பதால் இது ரத்த அழுத்தத்தை எதிர்த்து போராடுகிறது.

மாம்பழத்தில் பீட்டா கரோட்டின் மற்றும் பொட்டாசியம் காணப்படுவதால் இப்பழமும் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

மாதுளம்பழத்தில் காணப்படும் ACE என்ற நொதி ரத்த நாளங்களின் அளவை கட்டுப்படுத்துவதன் மூலமாக ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News