Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநரின் செயல்முறைக் கடிதம் மற்றும் இவ்வலுவலக கடிதத்தின்படி , 2023-2024 ஆம் கல்வியாண்டுக்கான புத்தாக்க அறிவியல் மானக் விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான பதிவுகளை இணைய தளத்தில் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளது தேதிவரை எவரும் பதிவேற்றம் செய்யப்படவில்லை இது மிகவும் வருந்தத்தக்கதாகும்.
அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களில் வகுப்பிற்கு ஒருவர் வீதம் ( 5 ) ஐந்து மாணவர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்ப முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ , மாணவியர்களில் வகுப்பிற்கு ஒருவர் வீதம் ( 3 ) மூன்று மாணவர்கள் என விண்ணப்பங்கள் 31.08.2023 ஆம் தேதிக்குள் www.inspireawards.dstgov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்திடவும் மற்றும் இணைப்பில் உள்ள குறிப்புகளை தவறாது பின்பற்றிட வேண்டும்.
தொடர்நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , எந்தவொரு பள்ளியும் விடுபடாமல் , அனைத்து நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் உரிய எண்ணிக்கையிலான புதிய பதிவுகளை தவறாது மேற்கொள்வதை உறுதி செய்யவும் , பதிவுகள் சார்ந்த முன்னேற்ற அறிக்கையினை வாராந்திர அறிக்கையாக 24.07.2023 முதல் 28.08.2023 வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைத்து முழுமைப்படுத்திடவும்.
தேனி மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக்கல்வி இடைநிலை தனியார் பள்ளி ) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்....
இணைப்பு
No comments:
Post a Comment