Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 25, 2023

ITR: 3 பெரிய சிக்கல்கள்.. வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்து விட்டீர்களா?

வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்னும் 6 நாட்களோடு முடிகிறது. தாமதமாக வருமான வரி தாக்கல் செய்வதால் 3 விதமான முக்கியமான பிரச்சனைகள் உள்ளன.

வருமான வரி கணக்கு ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கிக்கொண்டே வருகிறது. ஜூலை மாதம் என்பதால் இந்தியா முழுக்க பலரும் வருமான வரி கணக்கு ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்து வருகின்றனர்.

ஜூலை 31 காலக்கெடுவை நீட்டிக்க நிதி அமைச்சகம் பரிசீலிக்காததால், வருமான வரி செலுத்துவோர் விரைவில் கணக்கு தாக்கல் செய்யுமாறு வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வரை சுமார் 5.83 கோடி வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


இந்த ஆண்டு அதை விட அதிக பேர் வருமான வரி தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். பட்ஜெட் 2023-24ன் படி, நடப்பு நிதியாண்டில் 33.61 லட்சம் கோடி ரூபாய் மொத்த வரி வரவு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஒவ்வொரு வருடமும் 10 சதவிகிதம் வரை வரி வருவாய் உயரும் என்று எதிர்பார்க்கிறோம் என்று அவர் கூறி உள்ளார். இன்னொரு பக்கம் ஆதார் கார்டு - பான் கார்டை இணைக்காதவர்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வது மிக கடினம் ஆகும் என்றும் மத்திய அரசு கூறி உள்ளது.

இதுவரை AY 23-24 க்கு 3.23 கோடி ITRகள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதாவது தோராயமாக 4.5 கோடி ஐடிஆர்கள் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. இனிமேல்தான் பலர் வருமான வரி தாக்கல் செய்ய போகிறார்கள். காலக்கெடு நீட்டிக்கப்படாவிட்டால், ஜூலை 31 வரை வருமான வரி இணையதளத்தில் பலர் ஐடிஆர் தாக்கல் செய்வார்கள்.

வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்னும் 6 நாட்களோடு முடிகிறது. தாமதமாக வருமான வரி தாக்கல் செய்வதால் 3 விதமான முக்கியமான பிரச்சனைகள் உள்ளன.

1) வரி நிபுணர்கள் , ஆடிட்டர்கள் பிஸியாக இருப்பதால் , உங்களுக்காக ஐடிஆர் தாக்கல் செய்வதை கடைசி நிமிடம் வரை தாமதப்படுத்தலாம்

2) கடைசி நிமிட பரபரப்பு என்பது ITR இன் தவறான கணக்கீட்டிற்கு வழிவகுக்கும்

3) 2-3 மாதங்கள் காத்திருந்து உங்கள் பணத்தைத் refund பெற நேரிடும். உடனே refund கிடைப்பது கஷ்டம்.

மெசேஜ்: இந்த நிலையில் வருமான வரி தாக்கல் செய்ய இன்னும் ஒரு வாரமே இருப்பதாக வருமான வரித்துறை மக்களுக்கு மெசேஜ் அனுப்பி வருகிறது. கடந்த வருடம் வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு அவர்களின் ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டு உள்ள போனுக்கு மெசேஜ் அனுப்பி வருகிறது.

வருமான வரி தாக்கல் செய்யும் காலக்கெடு முடிய போகிறது. உடனே தாக்கல் செய்யுங்கள் என்று மெசேஜ் அனுப்பி வருகிறது. நம்மில் சிலர் இப்படி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யும் போது ரீ பண்ட் தொகைக்கான வங்கி கணக்கை பதிவிடும் போது தவறான கணக்கை கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.அது போன்ற சமயத்தில் உங்களின் ரிட்டர்ன்ஸ் "process" அதாவது சோதனைக்கு உட்படுத்தப்படும் முன் அதை உங்களால் மாற்ற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News