Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 13, 2023

merit மற்றும் ranking- படி பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் கடித விளக்கம்!!!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
மேற்கண்ட இரண்டு அரசுக் கடிதங்களும் சமீபத்தில் வாட்ஸாப் மற்றும் முகநூலில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதாவது TNPSC மூலம் நியமனம் பெற்றவர்களுக்குள், merit மற்றும் ranking- படி பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில் பெற வேண்டிய தெளிவுகள்

1.இது உச்சநீதிமன்ற உத்தரவு 6415/2021 ன்படி, Merit மற்றும் rank - ஐ கணக்கில் கொண்டு பதவி உயர்வு பட்டியல் தயார் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. காரணம் உச்சநீதிமன்ற உத்தரவில் ஜீலை 31க்குள் இந்த மாதிரியான panel - ஐ தயார் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

2. இது ஆசிரியர்களுக்கு மட்டுமானது இல்லை மாறாக அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கும் பொதுவானது.

3.ஆசிரியர்கள் பதவி உயர்வில் TET-க்கும் இதற்கும் தொடர்பு இல்லை. TET Case தனி track.

4.இதன்படி என்னதான் merit மற்றும் rank அதிகமாக இருந்தாலும், அந்தந்த வருடத்தைத் தாண்டி முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற முடியாது.

5- TRB மூலம் appointment பெற்றவர்கள் மற்றும் TNPSC மூலம் appointment பெற்றவர்களில், தாங்கள் நியமனம் பெற்ற வருடத்தில் , தன்னோடு நியமனம் பெற்றவர்களில் merit மற்றும் rank அடிப்படையில் முன்னுரிமை பெறமுடியும்.

6. இனி merit மற்றும் rank ன் படிதான் promotion Panel தயார் செய்யப்படும்.

7. எந்த வழியிலும் தான் நியமனம் பெற்ற வருடத்தைத் தாண்டி , முந்தைய வருடத்தில் நியமனம் பெற்றவர்களுடன் முன்னுரிமை பெற இயலாது.

8. இதுவரை Merit மற்றும் rank அடிப்படையில் இல்லாமல் பதவி உயர்வு பெற்றவர்களை இது கட்டுப்படுத்தாது.

9. ஏப்ரல் 2023 முதல் இது நடைமுறைக்கு வருகிறது.

10. Group - 1, level-ல் நியமனம் பெற்றவர்களின் promotion panel , merit மற்றும் rank அடிப்படையில் விரைவாக தயார் செய்யப்பட்டு, உடனடியாக பதவி உயர்வு வழங்கப்படும் என்றே தெரிகிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News