Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 3, 2023

TRB - வட்டார கல்வி அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
வட்டார கல்வி அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இணையதளம் வழியாக வரும் 12வரை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வுக்கு ஜூன் 6ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் உள்ள வட்டார கல்வி அலுவலர் ( Block Educational Officer) பணிக்கான தேர்வுக்கு ஜூன்-06 முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நேரடி நியமனமாக உள்ள இந்தத் தேர்வுக்கு தேர்வர்கள் ஜூலை 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க யு.ஜி.சி. அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பி.எட். அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம், வேதியியல், இயற்பியல், உயிரியல், விலங்கியல், வரலாறு, புவியியல் ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க 01.07.2023 -ன் படி 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

அரசு இடஒதுக்கீடு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தேர்வுக் கட்டணமாக ரூ. 600 செலுத்த வேண்டும். பழங்குடியினர், பட்டியலின பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மட்டும் ரூ.300-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் https://www.trb.tn.gov.in/என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து, வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். நேரடி நியமனமாக உள்ள இந்தத் தேர்வுக்கு தேர்வர்கள் ஜூலை 5-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பல்வேறு இணைய கோளாறு காரணமாக விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கியது. இந்தத் தேர்வுக்கு தேர்வர்கள் ஜூலை 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூலை 12ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News