திருக்குறள் :
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.
விளக்கம்:
புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. அறிவும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும்.
பொன்மொழி :
பணம் மட்டுமே வாழ்க்கையல்ல அதையும் தாண்டி மனிதன் அடைய வேண்டிய அனுபவங்கள் பல உள்ளன. மன நிம்மதி அன்பு தவம் தியானம் முதலிய குணங்கள் எல்லாம் பணத்தால் வருபவை அல்ல. விவேகானந்தர்
பொது அறிவு :
1. இந்தியாவின் மிக உயர்ந்த விருது எது?
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
வெந்தயம்: இது நார்ச்சத்தையும், சவ்வு தன்மையும் கொண்டிருப்பதால் இது வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.
ஆகஸ்ட்07
இரவீந்தரநாத் தாகூர் அவர்களின் நினைவுநாள்
இரவீந்தரநாத் தாகூர் |
கை ரிக்ஷா ஒழிப்புத்திட்டம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத்திட்டம், எல்லா மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள், கலை அறிவியல் கல்லூரிகள் பல பல்கலைக்கழகங்கள் எனப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர்.
இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்தி, 50 விழுக்காட்டில் 30 விழுக்காடு பிற்படுத்தப் பட்டோருக்கும், 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், 18 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், 3 விழுக்காடு அருந்ததியருக்கும், 3.5 விழுக்காடு இஸ்லாமியருக்கும், 1 விழுக்காடு மலைவாழ் மக்களுக்கும் அளித்து அனைத்து சமூகத்திலும் அடித்தட்டு மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளை உறுதி செய்ததனால் மானுட மேம்பாட்டுக் குறியீட்டில் இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.
நீர்ப்பாசனம், மின்சாரம், வேளாண்மை, தொழிலாளர் நலன், நிலச் சீர்த்திருத்தம் ஆகிய துறைகளில் மேம்பாட்டுத் திட்டங்களை வளர்த்ததால் தமிழ்நாடு உணவு தானிய உற்பத்தியில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது. சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதாலும், தொழில் துறை முதலீடுகளை ஈர்ப்பதற்கு கலைஞரின் ஆட்சிக்காலங்களில் செயல் திட்டங்களை அறிமுகப்படுத்தியதாலும் தமிழகம் தொழில் துறையிலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் ஒரு சீரான வளர்ச்சியை பெற்றிருக்கிறது.
நீதிக்கதை
ஒரு காட்டில் முயல் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த முயல்கள் பச்சை பசேல் என இருந்த அந்த காட்டில் கிடைத்த உணவுகளை எல்லாம் உண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தன.
அவர்களுக்கு அங்கு சுலபமாக சாப்பிட உணவு தினமும் கிடைத்துக் கொண்டிருந்தது. திடீரென்று கோடைகாலம் வந்தது, கோடை கால வெப்பம் அதிகமாக இருந்ததால் அங்கே பச்சை பசேல் என இருந்த புற்கள் எல்லாம் கருகி, பாலைவனம் போல் தோற்றமளித்தன.
இந்த முயல்களுக்கு சாப்பிட உணவு எதுவும் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு கொண்டு இருந்தன. அங்கே வேட்டை நாய்கள் இந்த முயல்களை அங்கேயும் இங்கேயும் பதுங்கி வேட்டையாட காத்திருந்தன.அந்த வேட்டை நாய்களைக் கண்டு இந்த முயல்கள் பொந்துக்குள்ளே ஒளிந்து கொண்டு, வெளியே வரவும் முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தன. உணவு இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டன.
“எவ்வளவு நாள் தான் இப்படியே பொந்துக்குள் ஒளிந்து இருப்பது நாம் ஏதாவது செய்ய வேண்டும்”, என்று எல்லா முயல்களும் கூடி பேசிக்கொண்டு இருந்தன.
அப்போது ஒரு முயல் சொன்னது, “கடவுள் நம்மை பலவீனமாக படைத்து விட்டார். எல்லா விலங்குகளும் ஏதாவது பிரச்சனை வந்தால் தங்களை காப்பாற்றிக்கொள்ளும் அளவிற்கு பலம் உடையதாக இருக்கின்றன. ஆனால், நாம் என்ன ஒரு பிரச்சனை வந்தாலும் நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியாமல் பலவீனமாக இருக்கிறோம். கடவுள் ஏன் நம்மை இப்படி படைத்து விட்டார்?” என்று குறை கூறிக்கொண்டே இருந்தது.
அப்போது மற்றொரு முயல் சொன்னது, “என்னால் இதற்கு மேல் இதை பொறுத்துக் கொள்ள முடியாது. பசியானாலும் இந்த வேட்டை நாய்களை பார்த்து பயந்து ஒதுங்கிறோம். “நாம் அனைவரும் எது செய்தாலும் ஒன்றாக செய்ய வேண்டும். வாழ்ந்தால் ஒன்றாக வாழ்வோம், இல்லையா எல்லோரும் சேர்ந்து நதியில் விழுந்து விடுவோம்” என்று நதியை நோக்கி புறப்பட்டு சென்றனர்.
அந்த முயல்கள் எல்லாம் ஒரு நதி கரையை சென்று அடைந்தனர். அங்கே சில தவளைகள் நதிக்கரையில் இருந்தது. இந்த தவளைகள் எல்லாம் முயல்களை பார்த்து பயத்தில் ஒன்றன்பின் ஒன்றாக நதியில் குதித்தன.நம்மை பார்த்துமா இவை பயப்படுகின்றன? இனி நாம் இந்த நதியில் விழுந்து சாகாமல் நாமும் இவ்வுலகில் தைரியமாய் வாழ வேண்டும் என முடிவு செய்தன.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment