Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, August 27, 2023

அரசுப் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்ட களஆய்வு - செப் .1 முதல் 15 வரை நடைபெறுகிறது

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

அரசுப் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கள ஆய்வுப் பணிகள் செப்டம்பர் 1 முதல் 15 - ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது . தமிழகத்தில் கரோனா பரவல் காலத்தில் பள்ளி மாணவர்களிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைக்க 1 முதல் 3 - ம் வகுப்புகளுக்கு எண்ணும் , எழுத்தும் திட்டம் கடந்த ஆண்டு அமல் படுத்தப்பட்டது.

அதன்படி , 2025 - ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் அடிப்படை கணிதத் திறனுடன் பிழையின்றி எழுத , படிப்பதை உறுதி செய்யும் விதமாக இத்திட்டம் தொடங்கப்பட்டது. நடப்பாண்டு எண்ணும் எழுத்தும் திட்டம் 5 - ம் வகுப்பு வரை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது . இந்நிலையில் , எண்ணும் எழுத் தும் திட்டம் 1 முதல் 3 - ம் வகுப்பு மாணவர்களிடம் எந்தளவு சென்றுள்ளது என்பதை மதிப்பீடு செய்ய பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக பி.எட் . பயிலும் மாணவர்கள் 3 - ம் நபர் மதிப்பீட்டாளர்களாக நியமிக்கப் பட உள்ளனர்.

இதுகுறித்து பி.எட் . மாணவர்களுக்கு ஆகஸ்ட் 28 ( நாளை ) முதல் 31 - ம் தேதி வரை அந்தந்த மாவட்டங்களில் பயிற்சி வழங்கப்பட உள்ளது . அதன்பின் , அவர்கள் மூலம் பள்ளிகளில் கள் ஆய்வுப் பணிகள் செப்டம்பர் 1 முதல் 15 - ம் தேதி வரை நடத்தப் படும் . இந்த பணியில் பிஎட் மாணவர் களை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கோரி உயர்கல்வித் துறைக்கு , பள்ளிக்கல்வி இயக்கு நரகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது . மறுபுறம் இந்த கள ஆய்வுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News