Join THAMIZHKADAL WhatsApp Groups
அன்றாட வாழ்வில் உணவுகளை உண்டு சரிவர உடலுக்கு தேவையான பயிற்சி தராமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பதால் நம்மில் பலருக்கு உடல் பருமன் ஏற்படுகிறது.
நம்மில் சில பேர் வயிற்றில் இருக்கக்கூடிய தொப்பையால் தினமும் சிரமப்படுகின்றனர்.நடக்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே வயிற்றில் இருக்கக்கூடிய தொப்பையை குறைப்பதற்கான ஒரு சிறந்த தீர்வை இங்கு தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
எலுமிச்சை
இஞ்சி
மிளகு
பட்டை
செய்முறை
எலுமிச்சையை பிழிந்து அதன் சாறை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்போது இதன் தோலை சிறிது சிறிதாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளவும். அடுத்ததாக ஒரு அரை இன்ச் அளவு இஞ்சியை தோலை நீக்கி சுத்தம் செய்துவிட்டு நன்றாக துருவி எடுத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக கால் தேக்கரண்டி அளவு கருப்பு மிளகை எடுத்துக் கொள்ளவும். அடுத்து இதனுடன் பட்டையை எடுத்துக் கொள்ளவும். இப்போது நறுக்கி வைத்திருக்க கூடிய எலுமிச்சை தோலுடன், துருவி வைத்த இஞ்சி, மிளகு மற்றும் இரண்டு பட்டையை சேர்த்து அதில் இரண்டு டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி அடுப்பில் நான்கிலிருந்து ஐந்து நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்க விடவும்.
பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு இந்த வானத்தை பத்து நிமிடங்களுக்கு அப்படியே மூடி வைக்க வேண்டும். இப்போது இந்த பானத்தை வடிகட்டி விட்டு அதனுடன் நாம் பிழிந்து வைத்திருக்கக்கூடிய எலுமிச்சை சாறையும் சேர்த்துக் கொள்ளவும். மேலும் இந்த வானத்துடன் சுவைக்காக சிறிதளவு தேனை கலந்து கொள்ளலாம்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தேனை தவிர்க்க வேண்டும். இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ள வேண்டும். இது நமக்கு பசி ஏற்படுவதை குறைக்கிறது. எனவே நம் உடல் எடையும் வேகமாக குறையும்.
வேகமாக எடை குறைய வேண்டும் வயிற்றில் இருக்கக்கூடிய கொழுப்புகள் குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு மாதத்திற்கு தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் இதை தவறாமல் குடிக்க வேண்டும். வயிற்றில் இருக்கக்கூடிய தொப்பை குறைந்த பிறகு இந்த பானத்தை நீங்கள் நிறுத்திக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment