Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, August 1, 2023

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் செய்முறை வகுப்பு: ஆக.10 முதல் விண்ணப்பிக்க தனி தேர்வர்களுக்கு அறிவுறுத்தல்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள தனி தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புக்கு ஆக.10-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2023-24-ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள நேரடி தனிதேர்வர்களும், ஏற்கெனவே 2012-க்கு முன்பு பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல்பாடத்தில் தோல்வியடைந்தவர்களும், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர பெயரை பதிவு செய்யலாம்.

தனி தேர்வர்கள் ஆக.10 முதல் 21-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்கள் பெயரை பதிவுசெய்து கொள்ள வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்கள், மாவட்டகல்வி அலுவலரால் ஒதுக்கப்படும் பள்ளிக்கு சென்று, செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். 80 சதவீத வருகை பதிவு உள்ள தனி தேர்வர்கள் மட்டுமே 2023-24-ம் கல்விஆண்டுக்கான 10-ம் வகுப்புபொதுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆக.10 முதல் 21-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலரிடம் ஆக.21-ம் தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News