Join THAMIZHKADAL WhatsApp Groups
தற்போது சர்க்கரை நோய் என்பது யாருக்குமே இல்லாமல் இருப்பதில்லை.
ஒரு வீட்டில் ஒருவருக்காவது இந்த சர்க்கரை நோய் பிரச்சனை ஏற்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பாரபட்சமே இல்லாமல் இந்த நோய் ஏற்படுகிறது.
எனவே இந்த சர்க்கரை நோயை வரவிடாமல் தடுக்கவும் ஒருவேளை இந்த சர்க்கரை நோய் இருந்தால் அதை எவ்வாறு கட்டுக்குள் கொண்டு வருவது என்பது குறித்தும் ஒரு இயற்கையான டிப்ஸை இங்கு தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
வெந்தயம்
கறிவேப்பிலை
இஞ்சி
பட்டை
வெந்தயத்தில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் இது ரத்தம் மற்றும் சிறுநீரகத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். மேலும் இதில் ஆண்டி ஆக்சிடென்ட் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால் பெண்களுக்கு கர்ப்பம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்யும்.
கறிவேப்பிலையில் ஐயன் வைட்டமின் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் இதில் இருக்கக்கூடிய ஆன்ட்டி பாக்டீரியல் நம் ரத்தத்தில் இருக்கக்கூடிய டாக்ஸினை வெளியே அனுப்ப உதவுகிறது.
இஞ்சி ஜீரண சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்கிறது. மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த இஞ்சி மிகவும் பயன்படுகிறது.
அடுத்து பட்டையில் இன்சுலின் உற்பத்தியை உயர்த்தக்கூடிய குணம் அதிகளவு உள்ளது. சர்க்கரை நோயால் வரக்கூடிய உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் இந்த பட்டை ஒரு நல்ல தீர்வாக அமைகிறது.
செய்முறை:
1. அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் இரண்டு கிளாஸ் அளவு தண்ணீரை ஊற்றி அதனுடன் ஒரு ஸ்பூன் அளவு வெந்தயத்தை சேர்த்துக் கொள்ளவும்.
2. இப்போது இதனுடன் பத்திலிருந்து 20 கருவேப்பிலை இலைகளை நன்கு கழுவி விட்டு சேர்த்துக் கொள்ளவும்.
3. பிறகு இதனுடன் அரை இன்ச் அளவு இஞ்சியை நன்கு இடித்து சேர்த்துக் கொள்ளவும்.
4. அடுத்ததாக இதில் சிறிதளவு பட்டையை சேர்த்துக் கொள்ளவும். அல்லது பட்டை பொடியாகவும் 1/4 ஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ளலாம்.
5. தண்ணீரில் வெந்தயம் கருவேப்பிலை இஞ்சி மற்றும் பட்டை ஆகிய பொருட்களை எல்லாம் சேர்த்து இரண்டிலிருந்து மூன்று நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
இது சூடு ஆறிய பிறகு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதை குடித்த பிறகு 30 நிமிடங்களுக்கு எதுவும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது. இந்த பானத்தை தொடர்ந்து குடித்து வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
இந்த பானம் சர்க்கரை நோய்க்கு மட்டுமல்லாமல் மூட்டு வலி முழங்கால் வலி கண் பார்வை குறைபாடு நரம்பு அடைப்பு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் என அனைத்தையும் தீர்க்கக்கூடிய சக்தி வாய்ந்தது. எனவே இதைத்தொடர்ந்து வெறும் வயிற்றில் தினமும் குடித்து வர உடல் ஆரோக்கியமாக காணப்படும்.
No comments:
Post a Comment