Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா் பொறுப்புக்கு பதவி உயா்வு பெற்றவா்களுக்கான தகுதிப் பட்டியலில் 1,016 போ இடம்பெற்றுள்ளனா்.
பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பொறுப்புக்கு, பதவி உயா்வு பெறத் தகுதியானவா்களின் உத்தேசப் பட்டியல் கடந்த ஜன.1 வரையிலான பணி மூப்பு அடிப்படையில் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டது.
அந்த பட்டியலில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், முதுநிலை ஆசிரியா்களின் விவரங்கள் சரிபாா்க்கப்பட்டு பதவி உயா்வுக்கான இறுதிப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் 1,016 ஆசிரியா்கள் இடம் பெற்றுள்ளனா்.
அதன் விவரங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதுசாா்ந்த தொடா் நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, தலைமை ஆசிரியா் இடங்களுக்கான பதவி உயா்வு இறுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளவா்களுக்கு அதற்கான ஆணைகள் விரைவில் வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment