Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடந்து முடிந்த 11ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் ஜூலை 28 அன்று வெளியாகியது.
தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.
விடைத்தாள் நகல்பெற, தேர்வு முடிவுகள் மீது மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டிற்கு மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு ஆகஸ்ட் 1, 2 ஆகிய தேதிகளாகிய இன்று மற்றும் நாளை நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment