Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான திறனாய்வுத் தேர்வுக்கு வருகின்ற 7 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டை பின்பற்றி தலா 500 மாணவ, மாணவிகள் என மொத்தம் ஆயிரம் பேர் இந்த தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், அவர்களுக்கு உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
இந்த தொகை மாணவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.
இதற்கான திறனாய்வுத் தேர்வு, தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளின் கணிதம் , அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில், இரு தாள்களாக தேர்வு நடத்தப்படும். இதற்காக, விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகின்ற 7 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகின்ற 18 ஆம் தேதிக்குக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, திறனாய்வுத் தேர்வு வருகின்ற செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment