Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 14-ம் தேதி இனிப்புப் பொங்கல் வழங்க வேண்டும் என்று சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சமூக நலத்துறை ஆணையர் வே.அமுதவல்லி, மாவட்ட அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
கருணாநிதி நூற்றாண்டு விழா: சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு மறைந்த முதல்வர் கருணாநிதி பிறந்தநாளில் இனிப்பு பொங்கல் வழங்கவும், அதற்கான பொருட்கள் வாங்குவதற்கும் சமூக நலத்துறை கடந்த மே மாதம் அனுமதி அளித்தது.
இதற்கிடையே கடந்த ஜூன் 3-ம் தேதி கருணாநிதி பிறந்தநாளில் வழங்கப்பட வேண்டிய இனிப்பு பொங்கல், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டதால் அன்றைய தினம் தர முடியாமல் போனது.
இந்நிலையில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தேசிய சமூக பாதுகாப்பு தினமான வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி, அனைத்து பள்ளிகளிலும் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதை செயல்படுத்தும் வகையில் அனைத்து சத்துணவு மையங்களிலும் பயனடைந்து வரும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 14-ம் தேதி (திங்கள்) இனிப்பு பொங்கல் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
IMPORTANT LINKS
Thursday, August 10, 2023
பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல்: ஆகஸ்ட் 14-ல் வழங்க உத்தரவு
Tags
பொதுச் செய்திகள்
பொதுச் செய்திகள்
Tags
பொதுச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment