Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, August 11, 2023

கலை, அறிவியல் முதுநிலை படிப்புக்கு ஆகஸ்ட் 14 முதல் விண்ணப்பிக்கலாம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

தமிழகத்தில் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்புகளில் 24,341 இடங்கள் உள்ளன. இவற்றை நடப்பு கல்வியாண்டில் (2023-24) நிரப்புவதற்கான சேர்க்கை அறிவிப்பை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி விருப்பமுள்ளவர்கள் www.tngasa.in, www.tngasa.org ஆகிய வலைதளங்கள் வாயிலாக ஆகஸ்ட் 14 முதல் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் மூலமாக கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள் 'The Director, Directorate of collegiate education, chennai-15' என்ற பெயரில் வரைவோலை எடுத்து செலுத்தலாம். இதுதொடர்பான மேலும் விவரங்களை அறிய 9363462070, 9363462042, 9363462007, 9363462024 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் எனவும் கல்லூரிக் கல்வி இயக்குநர் ஜி.கீதா வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News