Join THAMIZHKADAL WhatsApp Groups
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகல விலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகின்றது.
அதன்படி ஜனவரி மாதத்துக்கான அகல விலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவீதம் அகலவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து ஊழியர்கள் ஜூலை மாதத்திற்கான அகல விலைப்படி உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் தற்போது வரை இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களின் ஜூலை மாதத்திற்கான அகல விலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஏ ஐ சி பி ஐ புள்ளிகளின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகலவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மே மாதத்தில் 134.7 புள்ளிகளையும், ஜூன் மாதத்தில் 136.4 புள்ளிகளையும் பெற்றுள்ளதால் அகலவிலைப்படி மீண்டும் நான்கு சதவீதம் வரை உயர அதிக வாய்ப்புள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment