Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. சிறப்புபிரிவு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு நேரடியாகவும், பொது பிரிவுக்கு ஆன்லைனிலும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
கால்நடை மருத்துவப் படிப்புகளான பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2023 - 2024-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 26-ம் தேதி வெளியிடப்பட்டது.
அரசு பள்ளி மாணவர்கள்...: பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் அரசுபள்ளி மாணவர்கள் 2 பேர் உட்பட 31 பேர் கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்று பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளனர். நடப்பாண்டில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு பி.வி.எஸ்சி - ஏ.ஹெச் படிப்பில் 45 இடங்கள், உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப படிப்பில்2 இடங்கள், கோழியின தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள் என மொத்தம் 53 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பி.வி.எஸ்சி. -ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு கால்நடைமருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
முதல் நாளில் சிறப்பு பிரிவு: பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு சிறப்பு பிரிவினருக்கான (மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள்வாரிசுகள், விளையாட்டு வீரர்கள்)கலந்தாய்வு வரும் 16-ம் நடைபெறுகிறது. இந்த படிப்புகளுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கலந்தாய்வு 17-ம் தேதி நடைபெறவுள்ளது. பி.டெக் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு 18-ம் தேதி நடைபெறுகிறது.
இந்த கலந்தாய்வுகள் அனைத்தும் நேரடியாக சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் ஒரு மணிநேரம் முன்னதாகவே வரவேண்டும்.
ஆன்லைனில் பொதுப்பிரிவு: பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கு பொதுப்பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஆன்லைனில் நடக்க இருக்கிறது. அதற்கான தேதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும். இதுதொடர்பான மேலும் விவரங்களை www.adm.tanuvas.ac.in, www.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழகத்தின் இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IMPORTANT LINKS
Thursday, August 10, 2023
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆக.16 முதல் கலந்தாய்வு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment