Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, August 8, 2023

இந்திய விமானப்படையில் அக்னி வீரர்களாக சேர ஆகஸ்ட் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு..!!

ராணுவம், கடற்படை, விமானப்படையில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் பணியாற்றும் 'அக்னி பாதை' திட்டம், கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு நடைபெற்று வருகிறது. 

அதே போல தற்போது விமானப் படைக்கும் ஆள் சேர்ப்பு நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்திய விமானப்படையில் அக்னி வீரர்களாக சேர ஆகஸ்ட் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 27, 2003 – டிசம்பர் 27, 2006க்கு இடையே பிறந்த திருமணமாகாத ஆண், பெண் விண்ணப்பிக்கலாம்.

குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் பாடத்துடன் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆகிய ஏதாவது ஒரு டிப்ளமோ படிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜூலை 27ம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News