Join THAMIZHKADAL WhatsApp Groups
விவசாயிகளுக்காக மத்திய அரசால் கடந்த 2019-ஆம் ஆண்டு துவக்கப்பட்ட மிக சிறந்த திட்டமாக இருக்கிறது பிஎம் கிசான் யோஜனா (PM Kisan Yojana).
இந்த திட்டத்தால் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் நிதி பலன்களை பெறுகின்றனர். இந்த PM Kisan திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
ஆண்டு தோறும் விவசாயிகளுக்கு 3 சம தவணைகளாக, 4 மாத இடைவெளியில் தலா ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியானது விவசாயிகளின் பேங்க் அக்கவுண்ட்டில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை விவாயிகளுக்கு 14 தவணைகளில் நிதி உதவி வழங்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தில் இணைந்திருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகள் அடுத்து PM kissan yojana திட்டத்தின் 15-ஆம் தவணையின் கீழ் அரசு வழங்கப்போகும் நிதிக்காக காத்திருக்கிறார்கள். பிஎம் கிசானின் 15-ஆவது தவணை நிதியானது நவம்பர் மற்றும் டிசம்பர் இடையே விவசாயிகளுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சரியான வெளியீட்டு தேதிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக நாம் காத்திருக்க வேண்டும்.
கடந்த ஜூலை 27, 2023 அன்று பிரதமர் நரேந்திர மோடி PM Kisan-ன் 14வது தவணைக்கான நிதியை விடுவித்தார். இதனை தொடர்ந்து மொத்தம் ரூ. 8.5 கோடி விவசாயிகளின் பேங்க் அக்கவுண்ட்ஸ்களுக்கு நேரடியாக சுமார் 17,000 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது. இந்த நிலையில் 15-வது தவணைக்கான அப்ளிகேஷன்ஸ் தற்போது ஓபன் செய்யப்பட்டுள்ளன. PM கிசான் திட்டத்தின் பலன்களை பெற விரும்பும் விவசாயிகள் கீழ் வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்.
தகுதி வரம்பு:
- இந்த திட்டம் குறிப்பாக ஏழ்மையான நிலையில் இருக்கும் விவசாயிகளுக்கானது
- அரசு வேலைகளில் இருப்பவர்கள் அல்லது வருமான வரி செலுத்தும் நபர்கள் இந்த திட்டத்தில் இணைய தகுதியற்றவர்கள்
- விவசாய குடும்பமாக இருந்தாலும் ஒரு குடும்ப உறுப்பினர் மட்டுமே இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற முடியும்
- EPFO உறுப்பினர்கள் இந்த திட்டத்தில் சேர தகுதி பெற மாட்டார்கள்
- பயனாளி இறந்துவிட்டால், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த திட்டத்தின் பலன்கள் கிடைக்காது
திட்டத்தில் சேர்வதற்கான அப்ளிகேஷன் ப்ராசஸ்:
- pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு முதலில் விசிட் செய்யவும். பின் ஹோம்பேஜில் தோன்றும் Farmer Corner ஆப்ஷனுக்கு செல்லவும்.
- பிறகு அதில் இருக்கும் New Farmer Registration என்பதை தேர்வு செய்யவும். திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்பும் நபர் எந்த நகரம் அல்லது கிராமத்தில் வசிக்கிறார் என்பதை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
- பின் ஆதார் நம்பர், மொபைல் நம்பர் வழங்கி வசிக்கும் மாநிலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின் பதிவு செய்யப்பட்ட நம்பருக்கு வரும் OTP-ஐ பெறவும்.
- வந்திருக்கும் OTP-யை தகுந்த இடத்தில என்டர் செய்த பிறகு, "Proceed Registration" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பெயர், மாநிலம், மாவட்டம், வங்கி மற்றும் ஆதார் தகவல்கள் உட்பட கேட்கப்பட்டிரருக்கும் அனைத்து தனிப்பட்ட விவரங்களையும் நிரப்ப வேண்டும்.
- Aadhaar authentication-க்கு பிறகு அப்ளிகேஷனை சப்மிட் செய்ய வேண்டும். முக்கியமாக அப்ளிகேஷனில் கேட்கப்பட்டபடி விவசாயம் தொடர்பான தகவல்களை சரியாக என்டர் செய்ய வேண்டும்.
- Save பட்டனை கிளிக் செய்வதன் மூலம் என்டர் செய்த் விவரங்களை சேமிக்க முடியும்
- இந்த வழிமுறைகளை பின்பற்றி முடித்தும் அப்ளிகேஷனை சப்மிட் செய்ததற்கான உறுதிப்படுத்தும் மெசேஜ் திரையில் தோன்றும்.
மேலே குறிப்பிட்டுள்ள தகுதி மற்றும் விண்ணப்ப செயல்முறையை பின்பற்றி PM-Kisan திட்டத்தில் ஒரு விவசாயி இணையலாம்.
No comments:
Post a Comment