Join THAMIZHKADAL WhatsApp Groups
மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் தங்களின் வாழ்க்கையில் பல வழிகளில் மகிழ்ச்சி இருக்கும், உங்களுக்குள் இருக்கும் எதிர்மறை விளைவுகள் நீங்கும், மாணவர்களுக்கு இந்த பெயர்ச்சி சிறப்பாக இருக்கும்.
அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும்.
ரிஷபம்: இந்த ராசிக்காரர்கள் பணப் பலன்களைப் பெறுவார்கள். தொழிலதிபர்களுக்கு சிறப்பான காலம், முதலீடு அதிக லாபம், இந்த நேரத்தில் ரியல் எஸ்டேட் வாங்கவோ விற்கவோ வேண்டாம்.
மிதுனம்:இந்த ராசிக்கு பல இடங்களில் குரு தொல்லைகளை ஏற்படுத்துவார். வேலை செய்பவர்களுக்கு முன்னேற்றம், பதவி, கௌரவம் லாபம், வியாபாரம் செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
கடகம்: இந்த ராசிக்காரர்களின் தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் நிறைவேறும். ஆரோக்கியம் சீராக இருக்காது. உங்கள் வாழ்க்கையில் பலவிதங்களில் மாற்றங்கள் காணப்படும். வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகள் வரலாம்.
சிம்மம்:காதல் உறவு வலுவாக இருக்கும். வாழ்க்கையில் சகல சந்தோஷங்களும் கிடைக்கும். இந்தப் பெயர்ச்சி மாணவர்களுக்கு சிறப்பாக அமையும். புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளுங்கள்.
கன்னி: இந்த நேரத்தில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகும், குடும்ப உறவு வலுவாக இருக்கும், தாய் மாமன் வீட்டில் இருந்து டென்ஷன் இருக்கும். புதிய வேலை எதுவும் செய்ய வேண்டாம்.
துலாம்: திருமண வாழ்வில் பல வழிகளில் பிரச்சனைகள் ஏற்படும். குடும்ப உறவில் இடையூறு காணப்படும். புதிய முதலீடுகளைச் செய்யாமல் பொறுமையுடன் செயல்படவும்.
விருச்சிகம்: இந்த நேரத்தில் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தினசரி வாழ்வில் பல வழிகளில் சவால்களை சந்திக்க வேண்டி வரும். காதல் உறவில் விரிசல் ஏற்படும். செலவுகளில் கவனம் தேவை.
தனுசு : காதல் வாழ்க்கை சர்ச்சைகள் ஏற்படலாம். ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம். மாணவர்களுக்கு இந்த காலம் சிறப்பாக இருக்காது, இந்த நேரத்தில் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
மகரம்: இந்த ராசிக்காரர்களுக்கு தாய், சகோதரரின் உடல்நிலையில் பிரச்னைகள் ஏற்படும், குடும்பத்தில் சச்சரவுகள் அதிகரிக்கும். காதல் உறவில் சிரமம் ஏற்படும், கணவன் மனைவி உறவு முறிவு ஏற்படலாம். மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும்.
கும்பம் : இந்த ராசிக்காரர்களுக்கு மன உறுதி அதிகரிக்கும். சிந்தனைகளை சரியாக வைத்திருங்கள், உடல் மகிழ்ச்சி, உத்யோகத்தில் கவனம் செலுத்த வேண்டும், வியாழன் வக்ர பெயர்ச்சி காரணத்தால் தொழில் சிறப்பாக அமையப் போகிறது.
மீனம் : இந்த ராசிக்காரர்களுக்கு இந்தக் காலம் சற்று சவாலாக இருக்கும், அன்றாட வாழ்வில் பிரச்சனைகள் வரும், இந்த நேரத்தில் புதிய முதலீடுகளைச் செய்ய வேண்டாம். செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
No comments:
Post a Comment