Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, August 26, 2023

வங்கி கணக்கில் சத்தமில்லாமல் எடுக்கப்படும் ரூ.295.. உஷாராகுங்க.. காரணம் இதுதான்!

பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பல்வேறு தரப்பினரும் அக்கவுண்ட் வைத்துள்ளனர். இந்த எஸ் பிஐ வங்கி இந்தியா முழுவதும் கிளைகளை நடத்தி வருகிறது.

பல்வேறு கடன் திட்டங்கள் என பல சலுகைகள் கொடுக்கப்படுவதால் SBI வங்கிக்கு வாடிக்கையாளர்கள் அதிகம்.

இந்நிலையில் தங்கள் சேமிப்புக் கணக்குகளில் இருந்து ரூ.295 கழிக்கப்படுவதாகவும், இது குறித்த எந்த தகவலும் தெரியவில்லை என வாடிக்கையாளர்கள் பலர் இணையத்தில் புகார் தெரிவித்தனர்.

எந்த தகவலும் இல்லாமல் ரூ.295 எடுக்கப்படுவது ஏன் என பல்வேறு தரப்பினரும் குழப்பத்தில் உள்ளனர்.

நீங்கள் மாதத்தவணை முறையில் எதையாவது வாங்கினார் அந்த EMI விவரங்களை கவனிக்கும் பகுதிதான் NACH. National Automated Clearing House (NACH) என்பதுதான் இதன் முழு விளக்கம். நீங்கள் emi செலுத்த வேண்டிய தொகை அந்த குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருநாள் முன்னதாகவும் உங்கள் அக்கவுண்டில் இருக்க வேண்டும்.

தனை NACH கவனித்திக்கொண்டிருக்கும். இது மிஸ்ஸானால் அபராதமாக ரூ.250 எடுக்கப்படும். அதற்கு வரி சேர்த்து மொத்தமாக ரூ.295 எடுக்கப்படும். எனவே இப்படி பணம் போகக்கூடாது என கருதினால் உங்கள் emi தொகையை சரியாக உங்கள் கணக்கில் வைத்திருங்கள்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News